பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கொள்ளக்கூடியவர்கள். ஒவ்வொரு குடும்பமும் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது. சில சமயங்களில் கிராமத்தில் அறிவாளியைத் தலைவனாக இவர்கள் தேர்ந்தெடுப்பது உண்டு. வேட்டையாடுதலில் நல்ல பயிற்சியும் பழக்கமும் உடையவன் அதற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்வான். சுருங்கக் கூறின், முறையான அரசு இல்லாமல், இவர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்கிறார்கள்.