பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. ஆர்க்டிக் பற்றி அரிய செய்திகள்

ஆர்க்டிக் பகுதியில் அண்மைக் காலத்தில் நடந்த ஆராய்ச்சியினால் பல அரிய செய்திகள் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு:

கனிவளம்

உறைந்த ஆர்க்டிக் பகுதியில் 200 ஆண்டுகள் வரை கிடைக்கக்கூடிய நிலக்கரி புதைந்துள்ளது. பெட்ரோலியமும் அதிக அளவுக்குத் தேங்கியுள்ளது. இங்குச் செம்பு, அலுமினியம், காரீயம், துத்தநாகம், டங்ஸ்ட ன், யுரேனியம், தங்கம் ஆகியவை பனிக்கட்டிக்குக் கீழ்ப் புதைந்துள்ளன.

பெரிங் நீர்வழி அணை (Bering Strait Dam)

திரு. பயோட் போரிசவ் அனுபவம் வாய்ந்த சோவியத்துப் பொறி இயல் அறிஞர். இவர் முன் மொழிந்துள்ள பயனுள்ள திட்டம் பெரிங் நீர்வழி அணையாகும். ஆசியா, அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களுக்கிடையே பெரிங் நீர் வழிக்குக் குறுக்கே இந்த அணை கட்டப்படுமானால், ஆர்க்டிக் பகுதி வெப்பமடையும். அரக்க ஆற்றல் வாய்ந்த குழாய்கள் ஆர்க்டிக் கடலிலுள்ள நீரை இறைத்துப் பசிபிக் கடலுக்கு அனுப்பும். இதனால், ஆர்க்டிக் பகுதி வளமிக்க பகுதியாக வாய்ப்புண்டு. இத்திட்டம் பற்றிக் கருத்து வேறுபாடுகளும் உண்டு.

அணுகு வழிகளும் ஆராய்ச்சியும்

பல நூற்றாண்டுகளாக விழும் பனி அழுத்தப் பட்டு 2 மைல் தடிமனுள்ள பனிக்கட்டி மலைகள் அண்டார்க்டிக்கில் உண்டாகியுள்ளன. எளிதில்