பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

எடுத்துச் செல்லக்கூடிய அணு உலையும் அமைக்கப் பட்டுள்ளது. இது உலகின் முதல் அணு உலை. மின்னாற்றல் அளிக்க இஃது அமைக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டியின் மேற்பரப்பில் லெனின் என்னும் பனி உடைக்கும் கப்பலும் சென்றுள்ளது. அட்லாண்டிக் பக்கத்தில் இருந்து தாழ்ந்து அமைந்துள்ள அணுகு வழிகளும், பசிபிக் பகுதியிலிருந்து ஆழமற்ற பாதைகளும் இதற்குண்டு. 1900க்குப்பின் வட முனை, ஆண்டுக்கு அரையடி வீதம் கிரின்லாந்து நோக்கி நகர்ந்து செல்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மைய ஆர்க்டிக் வடி நிலத்தைச் சோவியத்து முறையாக ஆராய்ந்துள்ளது. இதனால் ஆர்க்டிக் கடலில் கப்பல் செலுத்துவதை மேலும் விரிவாக்க முடிகிறது. 1962 - இல் கப்பல் செல்லுதல் ஒரு மாதம் வரை நடைபெற்றது. சோவியத்து மக்கள் உள்ள வட கடல்வழி பல பகுதிகளுக்கு வாழ்வளித்துள்ளது. சோவியத்துத் துந்திராவில் கடல் துறைமுகங்களும், தொழில் நகரங்களும் ஏற்பட்டுள்ளன.

மைய ஆர்க்டிக் பகுதியை ஆராய்வதால், அதனை வளப்படுத்தப் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இங்கு நடந்த ஆராய்ச்சியின்படி, மிக வெப்பமான நாட்களில் பனிக்கட்டி மேற்பரப்பின் காற்று வெப்ப நிலை 2°C-க்கு மேல் உயர்வதில்லை. ஆனால், ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் வெப்பநிலை 10°C ஆக உள்ளது.