இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடல் நூல் வரிசையில் இச்சிறு நூல் வெளியிடப்படுகிறது. இந்தியக் கடல் ஆராய்ச்சி என்னும் அனைத்துலகத் திட்டம் வகுக்கப்பட்டுச் சீரிய முறையில் செயற்படுத்தப்பட்டபின் கிடைத்த செய்திகள், உண்மைகள் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் ஆகியவை யும்; மற்றும் ஆர்க்டிக் பெருங்கடலின் அடிப்படைச் செய்திகளும் வகைப்படுத்தியும், தொகைப்படுத்தியும் இதில் கூறப்பட்டுள்ளன. ஆர்க்டிக் பெருங்கடல் பற்றி முதன் முதலில் முறையாக எழுதப் பட்ட நூல் இதுவே . பள்ளி நூலகங்களுக்கும், பொது நூலகங்களுக்கும் தலைவாய் நூலாக இது பெரிதும் பயன்படும். செய்தித் தாள்களின் ஒருமித்த பாராட்டைப்பெற்ற நூல் இது.
பதிப்பகத்தார்