பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix கி. பி. 424ஆம் வருஷத்திலேயே செயின்ட் மெஸ்ராப் பைபிளே. மொழி பெயர்த் திருந்தார். 36 எழுத்துகளைக் கொண்ட ஆர்மேனிய அகர வரிசையைக் கண்டுபிடித்தவரும் அவரே. . ஆர்மேனியர்கள் வியாபாரம், பெரும் வர்த்தகம் ஆகிய வற்றின் ஒரு புதிய அத்தியாயத்தையும், பரஸ்பர நலனுக்கு உதவும் நட்பையும் சிரத்தையையும் அடிப்படையாகக்கொண்ட ஒரு உறவையும் இந் தி யா வுக் கு க் கொண்டுவந்தார்கள். ஆர்மேனியர்கள் நல்ல வர்த்தகர்களாகவும், நல்ல குடி மக்களாகவும் இருந்திருக்கவேண்டும். ஏனெனில், கல்கத்தா விலும் சென்னையிலும் ஆர்மேனியன் தெரு’ என்ற பெயரைக் கொண்ட நீளமான தெருக்கள் இருக்கின்றன. இவ்விரு ஆர்மேனியன் தெருக்களிலும் இருநூறு வருஷங்களுக்கும் மேற்பட்ட ஆர்மேனியன் சர்ச்சுகள் நிலைபெற்றிருக்கின்றன. கல்கத்தாவில் நாசரத்தில் இருக்கிற ஆர்மேனியன் புனித தேவாலயம்தான் இந்தியாவில் உள்ள மிகப் புராதனமான ஆர்மேனியன் சர்ச் ஆகும். 1707-ல் அமைக்கப்பட்டு, அவ்வப் போது புதுப்பித்தும் விரிவுபடுத்தியும் கட்டப்பெற்றுள்ள இத் தேவாலயத்தில் ஒரு சமாதிக் கல், இருக்கிறது. 'காலம் சென்ற தர்மசிலர் சூக்கியாசின் மனைவி ரெஸா பீபி'யின் கல்லறைச் சின்னமாக விளங்கும் அது, ஜூலை 21, 1630 என்ற தேதியைக் கொண்டிருக்கிறது. பதினரும் நூற்ருண்டின் இறுதிக் கட்டத்தில் கல்கத்தாவுக்கு வந்து குழுமத் தொடங்கிய ஆர்மேனிய வர்த்தகர்கள் அந் நகரத்தில் நன்கு செழிப்புற்றனர். பழைய ஹெளரா பாலத்துக்குத் தெற்கே, ஹஅக்ளி ஆற்றங்கரை மீது அவர்கள் தங்களுக்கெனத் தனி இடுகாடும் அமைத்துக் கொண்டார்கள். கல்கத்தாவில் ஆர்மேனியர்கள் நிறுவிய பிரதான அமைப்புகள் பல இன்றும் நிலைத்திருக்கின்றன. இன்றைய 500 அறைகள் கொண்ட கிராண்ட் ஹோட்டல்’ ஆராது.ான் ஸ்டீபன் என்ற ஆர்மேனிய நகை வியாபாரியின் முயற்சியால் தோன்றியதுதான். ஸி. எல். பிலிப்ஸ் எனும் மற்ருேரு ஆர்மேனியர்-இந்திய நிலக்கரிச் சுரங்கங்களில் அவர் கொண்டிருந்த மிகுந்த தொடர்புகள் காரணமாக அவர் நிலக்கரி மன்னன்’ என்று அழைக்கப்பட்டார்-மாளிகை போன்ற ஒரு பெரிய வீட்டைக் கட்டினர். அதற்கு பிலிப்சின் அறிவினம்’ (Philips Holly) என்று அவர் பெயர் வைத்தார்-நல்ல நகைச் சுவை உணர்வு உள்ளவராக இருக்கவேண்டும்! அப்புறம், கல்கத்தாவின் ஆர்மேனியன் காலேஜ் இருக்கிறது. இப்போதும் அது கல்விப் பயிற்சியின் சுறுசுறுப்பான கேந்திரமாகத் திகழ்கிறது. ஆங்கில இலக்கிய அபிமானிகளுக்கு இந்த