பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஷாக் ஜியுல்கலாரியன் (1918) ஆருவது கட்டளே அவன் ஒரு பெரிய கவி என்று எல்லோரும் சொன்னர்கள். மரியா மகதலேளுளின் பாபத்தை மன்னித்த ஆண்டவனிடம் அவன் நம்பிக்கை வைத்திருந்தால்! ஆனால் அவன் மத நம்பிக்கை கொண்டவன் அல்ல. மேலும், தன்னலத் தியாகம் மடத்தன மானது என்று அவன் கருதினன். அவன் ஆண்மை நிறைந்தவன். அவளுேடு பழகிய பெண்கள் அப்படித்தான் நம்பினர்கள். தடித்த உதடுகளும், உணர்ச்சி நிறைந்த பெரிய வாயும், நெளி நெளியான கரிய தலைமுடியும் பெற்றிருந்த அந்த இளைஞளுேடு அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். ஒரே பார்வையில் வெற்றி கொண்ட, ஏக்கம் நிறைந்த கரும்கண்கள்தான் அவனின் மிகச் சிறந்த அம்சமாக விளங்கின. அவன் கழுத்தில் டை" கட்டிக் கொள்வதில்லை. மிகச் சமீபகால நாகரிக முறைகளை அவன் பின்பற்றமாட்டான். நேர்த்தியாக அலங்கரித்துக்கொண்ட யு னி வர் சி ட் டி மாணவர்களே இஸ்திரிபோட்ட உடுப்புகள்’’ என்று பெண்கள் பரிகசித்தார்கள். ஆனால், எப்போதும் அசிங்கமான தமாஷ் களைப் பேசிக்கொண்டு-தன் அம்மாவின் முன்னிலையில்கூட அவற்றைக் கூற அவன் தயங்கமாட்டான்-புகையும் கறுப்புக் குழாயை உறிஞ்சியவாறு காணப்பட்ட பார்கெவ் ஆராமலை ஒரு காட்டுமிராண்டி’ என்று அவர்கள் குறிப்பிட்டார்கள், அவன் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தினன். ஆனல், இளம் பெண்கள் ஆச்சர்யம் அடையவில்லை. அவனைக் கண்டதுமே காதல் கொண்டார்கள். 'ஆருவது கட்டளையாவது: விபசாரம் செய்!” ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தங்கள் புனிதமான எழுத்துகளே உருவாக்கிய ஒரு மீனவனும் ஒரு தச்சனும் வாழ்க்கையைப்பற்றி என்ன கண்டார்கள்? அப்போது கூட மரியா மகதலேன அருகிலேயே வாழ்ந்துகொண்டிருந் தாளே!