பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஆருவது கட்டளை "நான் அறிவேன். நான் ஒரு புதிய கிறிஸ்துவைப் பெற்றெடுப்பேன் என்றுகூடச் சொல்கிருர்கள். இதைக் கூறிவிட்டு அஸ்மிக் சிரித்தாள். பிறகு அவள் பணியாளுக்குச் சைகை காட்டினள். 'என் கணவருக்கு ஒரு கிளாஸ் காக்னக் வேண்டும்.’’ பணியாள் சென்ருன். பார்கெவ் தன் கையிலிருந்த பானத்தைக் குழப்பத்தோடு கீழே வைத்தான்.

  • நீ என்ன சொன்னுய்?’’ 'ஒரு கிளாஸ் காக்னக்கை உன்னல் குடிக்க முடியாதா?’’ * நிச்சயமாக முடியும்.’’ . 'நான் காசு கொடுப்பேன். இதில் குழப்பம் அடைவதற்கு ஒன்றுமில்லை, பார்க்கப்போஞல், நாம் இருவரும் மாணவர்கள் தானே.”

பணியாள் திரும்பி வந்தான். மன்னிக்கவும். உங்களுக்கு எந்த ரகம் தேவை என்று கேட்க மறந்துபோனேன்.” "என் கணவர் மிகச் சிறந்த பானத்தை மட்டுமே குடிப்பார்.' பார்கெவ் அவநம்பிக்கையோடு அவளே உற்றுப் பார்த்தபடி இருந்தான். "அப்படி விழிக்காதே. அது மரியாதை இல்லை’ என்று கூறி அவள் சிரித்தாள். 'விஷயம் சுவாரஸ்யமாகிக்கொண்டிருக்கிறது.” 'ரசமான விஷயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. நமது ஜனவரி விடுமுறையின்போது நாம் கல்யாணம் செய்து கொள்வோம்.’’ 'என்னிடம் வந்த பெண்களை எல்லாம் நான் மணந்திருந் தால், எனக்கு எத்தனை மனைவிகள் இருப்பார்கள் தெரியுமா?’’ 'ஆனல், நீ என்னை மணந்துகொள்வாய். நான் வித்தியாச மானவள்.’’ புறப்படுவதற்காக அவர்கள் எழுந்தபோது அஸ்மிக் சொன்னுள் : "கோர் என்னைவிட அதிக அழகி. நாஸிக் என்னை விட இனியவள். குழாயை வாயில் வைத்திருக்கையில் நீ நன்ருகவேயில்லை. அதை எப்படிப் புகைப்பது என்றும் உனக்குத் தெரியவில்லை. இனிமேல் புகை பிடிக்காதே."