பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஷாக் ஜியுல்நஸாரியன் 79 'நீ கெட்டுப்போய்விட்டாய். எல்லாம் உனக்கு வெகு சுலபமாக வந்து சேர்கிறது. நாம் போகலாம்.’’ 'நீ எங்கும் போகப்போவதில்லை.” 'அசட்டுத்தனமாக நடக்காதே. நான் போய்க்கொண்டிருக் கிறேன் என்று நீ நன்கறிவாய். நீ வாசல்வரை வந்து என்னை வழி அனுப்பலாம்.’’ பார்கெவ் காதல் தவிர்ந்த ஏனைய உணர்ச்சிகளை-கோபம், ஆச்சர்யம், வேதனை அனைத்தையும்-அனுபவித்தான். 'வருத்தப்படாதே’ என்று கூறி, அஸ்மிக் திடீரென்று அவனைத் தழுவிளுள். இதற்கு முன் உன்னை யாரும் காதலித்தது இல்லை. அவர்கள் உன்னை ஏமாற்றினர்கள். அவர்களை ஏமாற்றி விட்டதாக நீ நினைத்தாய். என்னை வீட்டுக்கு இட்டுச்செல்.’ அதிசயம்தான். அவனது உண்மையான முதல் கவிதை அன்று இரவு பிறந்தது. வெறுக்கத் தகுந்த, வித்தியாசமான, ஒரு பெண்ணைப்பற்றிய கவிதை அது. அவனுடைய நண்பர்கள் புரியாது குழம்பினர்கள். பார்கெவ் ஆராமஸின் குழாய் திடீரென்று மறைந்துபோயிற்று. அவன் சட்டைகள் இப்போதெல்லாம் சதா சுத்தமாகவே இருந்தன. இயல்பாக, அவர்கள் அந்தச் சமயத்தில் கவலைப்படவில்லை. அவளுடைய படிப்பு அறையின் சன்னலுக்குக் கீழே அவன் பல மணி நேரம் நிற்க நேரிட்டது. சதுக்கத்தில் ஒரு பெஞ்சில், தன்னை மணந்துகொள்ளும்படி அவளை அவன் திரும்பத் திரும்ப கேட்கவேண்டியதாயிற்று. அப்புறம், பார்கெவ் ஆராமஸ் கழுத்தில் ஒரு 'டை கட்டக் கற்றுக்கொண்டதும், அவன் மற்ற அனைவரையும் போலவே ஆகிவிட்டான். அஸ்மிக் மட்டுமே வித்தியாசமாகக் கருதினுள். அவள் வேறுவிதமாகக் கருதி, வெகுவாகச் சந்தோஷப்பட்டாள்.