பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிக் அவாகியன் 81 காட்டுக்குள்ளே போகவேண்டிய அவசியம் இல்லை. தூரதரிசிக் கண்ணுடி பொருத்திய ஒரு சாதாத் துப்பாக்கி அவனிடம் இருந்தது. நாணல் காட்டிலிருந்து அரை மைல் விலகி அவன் உட்கார்ந்திருப்பான். தனது நாணல் காட்டைவிட்டு மடத்தன மாக வெளியே வருகிற எந்தப் புலியையும் அவன் சுட்டுவிடுவான். பிறகு தனது இரையைத் தோளில் சுமந்துகொண்டு கிராமத்துக்குத் திரும்புவான். அவன் எப்படி நடந்தான்! அந்தக் காலத்தில், ஒரு ஆகஸ்டு மாத நடுப்பகலில், அளிரியன் ஜியார்ஜின் திறந்தவெளி விடுதியில் நாங்கள் ஜின் குடித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் சோர்வடைந்து, ஒரு வரை ஒருவர் பார்த்தபடி, வெயிலால் பாதிக்கப்பட்டு எங்களில் எவராவது ஒருவர் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்குவதை எதிர் பார்த்துக் காத்திருந்தோம், நாங்கள் ஐந்து பேர்: பூக், ஹேரி, ரிவே என்று மூன்று அமெரிக்கப் போர்வீரர்கள்; கூர்ஜென் ஹோவ் ஹான்னிசியன் எனும் பெயர் உடைய செம்படை வீரன் ஒருவன் மற்றும் நான். ரஸ்தாவுக்கு அப்பால், மறுபுறத்தில், கோபுரம்போல் ஒரு மலே நிமிர்ந்து நின்றது. குகே மார்-பாம்பு மலை - என்று பூர்வ குடியினர் அதைக் குறிப்பிடுவர். அதன் அடிவாரத்தில் உள்ள பாதை வழியாக விவசாயிகள் வீடு திரும்பிக்கொண்டிருந் தார்கள். பாப்பி வயல்களிலிருந்து அவர்கள் திரும்பி வந்தார்கள். துாரத்தில், குனிந்து நடந்த கறுப்பு மனிதர்களையும், அவர்கள் காலடிகளிலிருந்து கிளம்பிய வெள்ளைப் புழுதியையும் நாங்கள் பார்க்க முடிந்தது. சரிவான பாதை முடிவுக்கு வந்த இடத்தில், அவர்கள் எங்களுக்குத் தென்படாமல் மறைந்தார்கள். வெகு நேரத்துக்குப் பிறகு அவர்கள் மறுபடியும் தோன்றினர்கள். மாலை வேளையில் குளுமையாக இருக்குமா இராதா என்று அவர்கள் முகங்களைப் பார்த்து நாங்கள் யூகிப்பது வழக்கம். அப்புறம் வாலி சாய்ஃபி, தான் கொன்ற ஒரு புலிக் குட்டியைத் தோள்மீது சுமந்துகொண்டு காட்சி அளிப்பான். ரஸ்தாமீது அவன் ஷா-இன்-ஷா (சக்கரவர்த்தி) மாதிரி நடப்பான். தனது மஞ்சள் மீசையினுடாக எங்களே நோக்கு வான். எங்களுக்கு வணக்கமாகத் தலையசைப்பான். கூர்ஜென் மகா எரிச்சல்கொண்டு, தனது தானியங்கித் துப்பாக்கியின் கட்டையை உள்ளங்கையால் அறைவான். 6 سيايي