பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தென்பிராந்திய ஜுரம் பெற்று, உங்களைச் சுட்டுக்கொண்டிருப்பவன். அரை கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து, தன் துப்பாக்கியின் டெலஸ்கோப் மேலேயிருக்கும் விசையைத் தட்டி, உங்கள் நெற்றிக்கு நேரே குறிவைத்துச் சுடுகிருன். சரியாகத் தாக்கிவிடுகிருன்’ என்று நான் சொன்னேன். 'லோரஸ்தானின் பாபெஹை உனக்குத் தெரியுமா ?” ! நிச்சயமாக நான் அறிவேன்.” கிழட்டுப் புலி என்னைச் சுற்றி வட்டமிட்டு அசைந்தது. கிழடு தட்டிய அதன் பிடரியையும், பழுப்பு நிறமாக இருந்த கண்களையும் நான் பார்த்தேன். அக் கண்கள் ஊடுருவி நோக்கின. 'அவர் நாணல் காட்டுக்குள் வருவது வழக்கம். பலமுறை பழுதுபட்டு ஒக்கிட்ட ஒரு துப்பாக்கி அவரிடம் இருந்தது. அவர் வயது முதிர்ந்தவராகி, எங்களே நேசிப்பதை நிறுத்தும் வரை நாங்கள் அவரை நேசித்து வந்தோம். அப்புறம் அடிக்கடி அவர் எங்களில் ஒருவரைச் சுட்டு, தனது இரையை வீட்டுக்குக் கொண்டு போனர். அப்போது என் உறவினன் ஒருவன் அவரை அடித்துக் கொன்ருன். வாலி சாய்ஃபியை நாணல் காட்டுக்குள் கூட்டி வா' என்று அது சொன்னது. அவனே நீ நாணல் காட்டுக்குள் இட்டு வரவேண்டும் என்று நாங்கள் எல்லோரும் கேட்டுக்கொள் கிருேம்’ என்று இறுதியாகச் சொன்னது. பிறகு அது திரும்பி, நாணல்களை நோக்கியது. உடனே புலிகள், இரைஞ்சும் பிடரிகளுடன், கெஞ்சும் வால்களுடன், யாசிக்கும் பார்வைகளோடு வெளிப்பட்டன. வாலி சாய்ஃபியை இங்கே கூட்டி வா’ என்று அவை தங்கள் வாயை அசைத்துக் கெஞ்சின. கிழப் புலி கூறியது : "வாலி சாய்ஃபி இவர்களை எல்லாம் துக்கத்திற்கு உள்ளாக்கி விட்டான். இவர்களின் குழந்தைகளே அவன் தோளில் தூக்கிப் போனன். இவர்களின் தந்தைகளையும் தாய்மாரையும் வண்டி களில் போட்டுக்கொண்டு போனன்.” எல்லாப் புலிகளும் ஏக காலத்தில் தங்கள் வாய்களை உயர்த்தி துக்கத்தோடு உறுமின. அவற்றின் செம் மீசைகளுடு கண்ணிர் உருண்டு ஒடுவதை நான் பார்த்தேன். 'நல்லது. இப்போது என்னைப் போகவிடுங்கள். நான் வாலி சாய்ஃபியை இங்கே அழைத்து வருவேன். இங்கேயே விட்டுச் செல்வேன்' என்றேன்.