பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிக் அவாகியன் 85 'ம்ர்ர்.ர்...ர்.’’ என்று புலிகள் உறுமின. ஆனந்தத்தோடு மண்ணைப் பிருண்டின. கிழப் புலி என்னைப் பார்த்துச் சொன்னது: "அந்தத் தண்ணிரில் ஒரு வாய் குடி. கனத்த நீல நீரிலிருந்து நான் குடித்தேன். நாளை உதயத்தில்’’ என்றேன். இப்போது நான் போகட்டும்!” எங்கள் எல்லை வரை நானும் உன்னோடு வருவேன். உன் துப்பாக்கியை எடுத்துக்கொள்’’ என்று கிழப்புலி கூறியது. நான் துப்பாக்கியை எடுத்தேன். பாம்பைச் சுழற்றி வீசுவது போல் நான் அதை வீசி எறிந்தேன். அது தேவையில்லை’ என்றேன். புலிகள் ம்ர்ர்.ர். ர்.’’ என்று கூறித் தரையைப் பிருண்டின. நாணல்களை விலக்கிக்கொண்டு அது வழிகாட்டியது. அதன் வால் நுனி முதல் வாய் முனை வரை ஒரு முடிவற்ற சோகம் நிலைத் திருப்பதை நான் கண்டேன். . எல்லையை அடைந்ததும், 'நன்றி, இதோ ரோடு வந்து விட்டது. இனி நான் என் வழியைக் கண்டுகொள்வேன்' என்றேன். கிழப் புலி கண்களை மூடி, என் கையை நக்கியது. 驾 密 密 வாலி சாய்ஃபி வீட்டில் இல்லை. அவன் மனைவி சோனி வீட்டுக்குள் என்னை அழைத்துச் சென்ருள். சொன்னாள்: 'ஐயா, நீங்கள் ரொம்பவும் தூசி படிந்து, ரொம்பவும் களைத்திருக்கிறீர்கள். அந்தச் சோபாவில் படுத்திருங்கள். வாலி எந்த நேரத்திலும் வந்துவிடுவார். நான் உங்களுக்காகத் தேநீர் தயாரிப்பேன்.’’ நான் வெகுவாகக் களைத்திருந்ததால், சோபா வில் படுத்தேன். - - - -

  • வாலி எங்கே?' என்று கேட்டேன்.
  • அவர் நாசமாய்ப் போக...” - - - சோனி அழுதிருந்தாள். இப்போது அவள் துயரத்தால் தன் விரல்களைக் கடித்தவாறு இருந்தாள். - -

"என்ன நடத்தது?’ என்று கேட்டேன்.