பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராபேல் ஆராம்யன் (1921) గ్ర( சிறுவனும் பெரிய லாரி டிரைவரும் ஒரு தொழிலாளர் குடியிருப்புக்கு இட்டுச் செல்கிற செங்குத் தான இறக்கம் ஒன்றின் ஒரத்தில் ஒரு விடுதி இருக்கிறது. ஜனங்கள் அபூர்வமாகத்தான் அங்கே தங்குவர். அதனல், அங்கு ஒரே ஒரு இரவுப்பொழுதைக் கழிக்கிற யாரையும் வெகுகாலம் வரை நினைவு வைத்திருப்பார்கள். குறைந்தபட்சம் இன்னொரு நபர் வந்து தங்கும் வரையிலாவது நினைவுகூர்வர். தன் சிறு மகனுடன் தனித்து வாழும் ஒரு பெண்தான் அவ் விடுதியின் சொந்தக்காரி. ஒரு இரவை அங்கே கழிக்கவேண்டிய ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. பிரயாணம் போவது குறித்தும், அயல்நாடுகளையும் கண் டறியாத நகரங்களையும் பார்ப்பதுபற்றியும் நான் என் வாழ்நாள் முழுவதும் கனவு கண்டிருக்கிறேன். ஆனால், நடை முறையில், எனது சிறிய ஆர்மேனியாவின் எல்லைகளுக்கு அப்பால் நான் போனதே இல்லை. நான் வேறு வேலை பார்க்கத் தகுதியற்றவகை இருந்ததேைலயே ஒரு லாரி டிரைவர் ஆனேன் என்று மக்கள் நினைக்கிரு.ர்கள். சில பேர் எவ்வளவு விந்தை மனிதராக இருக்கிருர்கள்: அவர்கள் பிறர்மீது எந்தப் பழியையும் சுமத்திவிடுகிரு.ர்கள். ஒருவன் தன்னையே அறிந்துகொள்ளவில்லை என்றுகூடக் குறை கூறுகிருர்கள். உண்மையில், நான் என்னை ரொம்ப நன்ருக அறிவேன். முகம் பார்க்கும் கண்ணுடிமுன் நிற்கிறபோதெல்லாம், நீதான் உலகத்திலேயே மிகுந்த குருபியாக இருக்கவேண்டும்; இல்லையேல் நீ ஏன் எவருடைய அன்பையும் ஒருபோதும் அடைமுடியாதவகை இருக்கிருய் என்று எனக்கு நானே கூறிக்கொள்ளும் அளவுக்கு நான் என்னை வெகு நன்ருக அறிவேன். ஆன லும் நீ நல்ல இதயம் பெற்றிருக்கிருய் என்றும் நான் கூறுவது உண்டு, நான் அதிகம் அளக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? அப்படி இல்லை. அதுதான் சரியான உண்மையாகும். இல்லையெனில், விடுதியின் சொந்தக்காரியையும் அவளுடைய வாயாடிச் சிறு மகனேயும் நான் ஒருபோதும் கவனித்திருக்கமாட்டேன்.