பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

袭盛 ஒரு சிறுவனும் பெரிய லாரி டிரைவரும் 'இப்போது ஆப்பிரிக்காவில் பயங்கரமான வெப்பம் நிலவும். இங்கே கிளிமாஞ்சரோ மலையடிவாரத்தில் கறுப்பு மான்கள் மந்தை மந்தையாக மேய்கின்றன’’ என்ருன். அவன் கண்கொட்டாமல் ஆப்பிரிக்காவைப் பார்த்தான். கறுப்பு மான்களும், வரிக் குதிரைகளும், நெருப்புக் கோழிகளும் கூட்டம் கூட்டமாக என்னைக் கடந்து புதர்களே நோக்கி ஓடுவதை நான் பார்ப்பதாகத் தோன்றியது. சிங்கங்களின் அடங்கிய கர்ஜனையை, நரிகள் மற்றும் கடுவாய்களின் பயங்கரக் கூச்சல்களை நான் கேட்பதாகவும் தோன்றியது. அங்கே, படத்தின்மீது குனிந்து உட்கார்ந்திருந்த நாங்கள், யானேகளின் காலடித் தடங்களைப் பின்பற்றி இருண்ட காடுகளில் திரிந்தோம்; எங்களுக்கு முன்னுல் குள்ள மனிதர்கள் சிறிய ஈட்டிகளைக் காற்றில் ஆட்டி அசைத்தவாறு ஒடிஞர்கள். நீங்கள் எங்களோடு டீ சாப்பிடுகிறீர்களா? இந்த நேரத்துக்குச் சாப்பாட்டு அறை மூடப்பட்டிருக்கும்.’’ நான் தலையை உயர்த்தினேன். விடுதித் தலைவி மிக அருகில் நின்றதைப் பார்த்தேன். அவளது வாதுமை வடிவச் சாம்பல் நிறக் கண்கள் அன்பை ஒளிபரப்பின. அவள் சிரித்துக்கொண் டிருந்தாள். இரண்டாவது முறையாக, எங்கள் பார்வைகள் சந்தித்தன. மீண்டும் அவள் தன் கண்களைத் தாழ்த்தினுள். நான் என்ன மடையன்! அவள் என்ன என் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடுவாள் என்று எண்ணினேனே! 'நீங்கள் அனுமதி அளித்தால், உங்கள் பையனை நான் என்ளுேடு நகரத்துக்கு அழைத்துப் போவேன். சில நாட்களுக்குப் பிறகு நானே அவனே உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பேன்’’ என்று கூறினேன். 'ஒவ்வொருவரும் அவனைக் கூட்டிப் போவதாக உறுதியாய்ச் சொல்கிரு.ர்கள். ஆனல் எவரும் அப்படிச் செய்வதில்லை.’’ நான் தவருது செய்வேன்' என்றேன். சிறுவன் சந்தோஷத்தால் முகம் மலரத் தனது உலகப் படத்தை மடித்தான். பெரிய உலகம் முழுவதையும் தன் சிறிய சட்டைப் பைக்குள் திணித்தான். நடு அறையை விட்டு வெளியே ஒடிஞன். - - - - - - - - காலையில் நாங்கள் கிளம்பிளுேம். அதுதான் சிறுவனின் முதல் பயணம். நாங்கள் பெரிய நகரத்தினுள்டே லாரியில் சென்றபோது, அல்லது இருவரும் சேர்ந்து அதன் விதிகளில்