பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்.கிர்திச் சார்கிஸ்யன் § 7 கார்சோ நடக்க விரும்புவதில்லை. அவர் நடக்கமாட்டார். பண்ணையின் கார் அவருக்கு பூட்ஸ் மாதிரி இருந்தது. வயல் களுக்கும் ஜில்லாக் கமிட்டிகளுக்கும் அவர் காரில்தான் போளுர், வழியில் யாரோடாவது பேச விரும்பினால், அவர் காரை நிறுத்தி, சன்னல் வழியே தலையை வெளியே நீட்டிப் பேசினர், விவாதித்தார் அல்லது வசைபாடினர். அது எவராக இருப்பினும் சரியே. சுருங்கச் சொன்னல், நாம் படுக்கப் போகிற வரை செருப்புகள் அணிவதுபோல், அவர் வீட்டு வாசல்படி வரை பண்ணையின் காரில் சவாரி செய்தார். அவரால் முடிந்திருக்குமானல் அவர் நேரே தன் படுக்கைக்குக் காரிலேயே போயிருப்பார். சுருக்கமாகச் சொல்வதானுல், காரில் துரு ஒட்டியிருந்ததுபோல் கார்சோவும் ஒட்டிக்கொண்டிருந்தார். நான் அவரை அவரது முழு உயரத்தில் கண்டதேயில்லை. எனக்கு அவர் எப்போதும் ஒரு காரின் சன்னல் வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு தலை மாத்திரமே. நான் அறிந்த தெல்லாம், அவர் தனக்குக் கீழே நான்கு சக்கரங்களையும், சத்தமிடும் ஒரு ஊதுகுழலேயும், இரவில் கண்ணைக் குருடாக்கும் ஒரு ஜதை முகப்பு விளக்குகளையும், தன் இடப்புறத்தில் ஒரு டிரைவரையும் கொண்டிருந்தார் என்பதே. அவர் ஒரு இடத்தி லிருந்து இன்னொரு இடத்துக்கு எங்கள் எல்லோரையும்போல் போனதில்லை. போகிற போக்கில் பொங்கி எழுகிற மஞ்சள் நிறப் புழுதியோடுதான் அவர் எப்போதும் விரைந்தார். அந்தப் புழுதியை நான் மறவேன். அது காரில் ஒட்டியிருந்தது, அவர் உடைகளையும் முகத்தையும் மூடியிருந்தது; அது அவருடைய பூட்சின் பளபள வர்ணத்தைத் தின்றுவிட்டது; அவரது ஆத்மாவினுள்ளேயும்கூட ஊடுருவியிருந்தது. "நாசமாய்ப் போக! அது துரு மாதிரி இருக்கிறது’’ என்று கூறி, கார்சோ காறித் துப்புவார். உடனே டிரைவரிடம், 'அதன்மேலே ஏறிப் போ!' என்பார். கார் முன்னே பாய்ந்து, ரஸ்தாவின் பளபளப்பான கருநிற முதுகின்மீது ஒடும். மஞ்சள் புழுதி, ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதுபோல் நின்றுவிடும்; ரஸ்தாவின் தளத்தில் மோதி மறைந்துவிடும். கார் நகருக்குள் புகுந்து, பண்ணை அலுவலகத்துக்கு வெளியே நின்றதும், கார்சோ கூட்டுப்பண்ணை விவசாயிகளை நோக்கித் தலையசைப்பார்; பிறகு, ஆபீசுக்குள் போவார். - 'அவர் கோபமாய் இருக்கிருர். ஏதோ ஒரு புயலில் அவர் சிக்கியிருக்கிருர்: அல்லது, அவரே ஒரு புயல் மாதிரி சாடப் ஆ-7