பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்.கிர்திச் சார்கிஸ்யன் 99 'ஏரெவ், என் மேல்சட்டை தூசியாக இருக்கிறது!’’ 'ஏரெவ், எங்குப் பார்த்தாலும் தூசி நிறைந்திருக்கிறதே!’’ அவர்கள் ஏரெவ்வை விட்டுவைக்கவில்லை. ஒ ஏரெவிக்... அவள் எனக்குச் சூரியனைவிட முக்கியமானவள். நான் இதை உணர்ந்துகொண்டபோது, அவள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்தாள்: நான் பத்தாவது வகுப்பில் இருந்தேன். எங்கள் வகுப்பு அறைகள் ஹாலுக்குக் குறுக்கே எதிர் எதிராக இருந்தன. எங்கள் வீடுகள் ரஸ்தாவின் குறுக்கே எதிர் எதிராக இருந்தன. சுருங்கச்சொன்னல், நாங்கள் சூரியனையும் பூமியையும்போல் இருந்தோம்; எப்போதும் எதிர் எதிராக; எப்போதும் துரம் துரமாக. ஏரெவிக் ஒல்லியாய் அழகாய் இருந்தாள். பெரிய, கரிய, மிரண்ட கண்கள் அவளுடையவை. அவள் அதிக அழகுடன் வளர்ந்தாள். அதுவே அவள் கண்கள் சிவந்து கலங்கக் காரண மாயிற்று. திருமதி முள்ளிக்கு அவளைக் காணவே சகிக்காது. அவளைத் தாக்குவதற்குக் கிட்டும் எந்த வாய்ப்பையும் முள்ளி நழுவ விடுவதில்லை. கார்சோவும் அவளைப் பின்பற்றினர். ஆகவே, ஏரெவிக்கின் கரிய பெரிய கண்கள் எப்போதும் கண்ணிரால் நிறைந்திருந்தன. அவர்கள் வீட்டுவாசலுக்கு வெளியே நான் அவளுக்காகக் காத்திருந்தேன். நீ எப்படி வளர்ந்துவிட்டாய், ஏரெவிக்! நீ எவ்வளவு அழகாக வளர்ந்திருக்கிருய்!” என்றேன். அவள் ஆச்சர்யமாக என்னைப் பார்த்தாள். என்னை அவள் நம்பவில்லை என நான் கண்டேன். அவர்கள் என்னைப் போது மான அளவுக்குப் பழிக்கிருர்களே, ஆர்மன். நீயும் சேர்ந்து பழிக்கவேண்டுமா?’ என்ருள். " ஆளுல், நான் உண்மையைத்தான் சொல்கிறேன். நீ நிஜமாகவே ரொம்ப அழகு.’’ அவள் கோபம் கொண்டவள்போல் தோன்றிஞள். அவள் முகம் ரத்தமேறிச் சிவந்தது. ஆயினும், அவள் கண்கள் சிரித்தன. இவ்வளவுதான? இன்னும் ஏதாவது உண்டா?’ என்ருள். அங்கிருந்து போக முயன்ருள். 'இன்று மாலை பழத்தோட்டத்துக்கு வா. நான் உனக்காகக் காத்திருப்பேன்.” அவள் ஒருகணம் தயங்கினுள். பிறகு வேகமாக வீட்டினுள் சென்ருள்.