பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii இளவரசர் ஒருவரையும் அந்தக் கூட்டத்தில் கண்டு அவர் மிகவும் பாதிக்கப்படுகிருர். நீ கூடவா ஆகா ஷாமீர்” என்று அவர் பெருமூச்செறிகிரும். நான் மட்டும்தான்; உங்களுக்குத் தேவையுள்ள நேரத்தில் வந்திருக்கிறேன்' என ஆகா ஷாமீர் பதிலளிக்கிருர். அது மட்டுமா? நவாபு அவருக்குத் தந்திருந்தி பிராமிசரி நோட்டை அவர் கிழித்தெறிகிருர், அவருடைய செயல் நவாபை மிக மோசமான ஒரு கட்டத்திலிருந்து காப்பாற்றிவிடுகிறது. தனது எல்லேக்குட்பட்ட ஆர்மேனிய நிலங்களுக்கும் கட்டடங்களுக்கும் நவாப் வரிவிலக்கு அளிக்கிரு.ர். இன்றுகூட ஆர்மேனியன் தேவாலயம் வரிவசூலிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறது. . - - இதனினும் அதிகமான வனப்புள்ளது ஆர்மேனிய வியாபாரி கோஜா பெட்ரோஸ் வாஸ்கன் சென்னை அருகில் உள்ள செயின்ட் தாமஸ் மவுன்ட் (பரங்கிமலை)மீது இருக்கிற ஆலயத்துக்கு நிர்மாணித்த 160 கல் படிக்கட்டு. அவரே சென்னையில் மர்மலாங் பாலத்தை 1728-ல் 30,000 பகோடாக்கள் செலவில் கட்டினர். மேலும், அந்தப் பாலத்தைப் பாதுகாப்பதற்காகவும் அவ்வப்போது பழுது பார்ப்பதற்காகவும் நிரந்தரமான நிதி ஏற்பாட்டையும் அவர் செய்தார். S S S S S S S S S SAAAAS கோஜா பெட்ரோஸ் வாஸ்கன் கவியுள்ளம் படைத்தவ ராகவும் இருந்திருக்கவேண்டும். அவர் சென்னையில் இறந்தார், அவருடைய உடல் ஆர்மேனியன் ஆலயத்தில் அடக்கம் செய்யப் பட்டது. ஆளுல், அவரது இதயம், ஈரானில் ஜல்பா இஸ்பஹானில் அவருடைய பெற்ருேர்களின் சமாதியில் புதைக்கப் படுவதற்காக, ஒரு தங்கப்பேழையில் எடுத்துச் செல்லப்பட்டது, இப்போது இந்தியாவில் அதிகம்ான ஆர்மேனியர்கள் வசிக்க வில்லை என்றே தோன்றுகிறது. சென்னையில் இரண்டு குடும்பங்கள், பம்பாயில் மூன்று, கல்கத்தாவில் சில நூறு குடும்பத்தினர். எண்ணிக்கையில் அதிகம் இல்லை என்ருலும், இந்தியாவில் வசிக்கும் ஆர்மேனிய இன்த்தவர்பற்றிய விவரங்கள், மெஸ்ரோப் ஜே. சேத் எழுதிய இந்தியாவில் ஆர்மேனியர்கன்’, ஆன்பாசில் எழுதிய இந்தியாவில் ஆர்மேனியக் குடியேற்றங்கள்’ என்ற இரண்டு புத்தகங்களிலும் நன்கு தொகுக்கப்பட்டிருக் கின்றன. இந்தியாமீது ஆர்மேனியர் பதித்துள்ள தாக்கம் உண்மை யானது. அதைவிட ஆழமும் நுண்மையும் கொண்டது. ஒரு ஆர்மேனியர் இந்திய அறிவாளிகளிடையே ஏற்படுத்தியிருக்கிற பாதிப்பு. அவர்தான் வில்லியம் ஸ்ரோயன். அவர் ஆங்கில