பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# () (; பெண்களே, நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்: அன்று மாலே அவள் பழத்தோட்டத்துக்கு வந்தாள். அந்த மாலை சூரியஒளி நிரம்பியதாக விளங்கியது. 'ஹல்லோ’ என்று அவள் நாணத்துடன் சொன்னாள். நாங்கள் வெகுநேரம் மவுனமாகவே இருந்தோம். என் உதடுகள் அதற்கு முன் பேசியிராத பிரியமான வார்த்தைகளை முணுமுணுத்தன. ஆனால், அவை அவற்றை மவுனமாய் என் மனசில் மட்டுமே முனகின. அவள் என்னைக் கூர்மையாகக் கவனித்தாள். தலை தாழ்த்தி, பேசாமலே இருந்தாள். 'நீ வந்ததில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நீ ரொம்ப இனிமையாக இருக்கிருய்; மிக இனிமையாக...”* 'அதனால்தான் நான் வந்தேன். இதற்கு முன் எவரும் என்னிடம் இதைச் சொல்லவில்லை. இதைக் கூறியதும், தான் சொன்னதற்காக வருத்தப்படுகிறவள்போல் அவள் திரும்பவும் மவுனமானள். பிறகு, சில நொடிகள் கழித்து, நீ விளையாட்டுக்குச் சொல்லவில்லையே? அப்படிச் சொன்னயா, ஆர்மன்?’’ என்று கேட்டாள். 'சத்தியமாய்ச் சொல்கிறேன், நீ சூரியன்போல் இருக்கிருய், ஏரெவிக்: ' நாங்கள் நகருக்குத் திரும்பி நடந்தோம். மனமில்லாமலே பிரிந்தோம். அது பேச்சுகள் இல்லாத, முத்தங்கள் இல்லாத, காதலாக இருந்தது. ஈடுகள், நம்பிக்கைகள் அல்லது வாக்குறுதிகள் இல்லாத, பொங்கிப் பிரவாகிக்கும் பெரிய காதல் அது. நாங்கள் மனசால் முத்தமிட்டுக்கொண்டும், ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டும், மவுனமாக நடந்தோம். பிறகு அதே பாதையில் வீட்டுக்குத் திரும்பிளுேம். நெடுநேரம் இல்லாமல் போனதற் காகத் திருமதி முள்ளி ஏரெவிக்கை இரண்டுமுறை அடித்தாள். இதற்கிடையில், வயல்களில் வசந்தம் வந்து சேர்ந்தது. அது எங்களைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தது. ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்ததும், ஏரெவிக்கும் நானும் வயலட் பூக்கள் பறிப்பதற் காகப் போனுேம். ஆண்டவனே, எப்படிப்பட்ட வசந்தம் அது! மலைகளும், சமவெளிகளும், பள்ளத்தாக்குகளும் பசுமையில் மூழ்கி, வெயிலில் காய்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றின. எண்ணற்ற மலர்கள் எங்கும் சிதறிக்கிடந்தன. அப்போதுதான் முதல் தடவையாக ஏவெரிக் சந்தோஷமாகச் சிரித்ததை நான் கேட்டேன். அவள் வண்ணத்துப்பூச்சிகளைத் துரத் தி க் கொண்டு அங்குமிங்கும்