பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்.கிர்திச் சார்கிஸ்யன் Ž G1 ஒடினள். அப்புறம் ஒடையில் குதித்தாள். என் மீது தண்ணிரை வாரி இறைத்தாள். நான் பைத்தியமாகிவிட்டேன், இல்லையா?’ என்ருள். இப்போது அவள் உண்மையாகவே சூரியன்போல் இருந்தாள். அவள் சேகரித்த மலர்க் கொத்துகளை ஒழுங்காக அடுக்குவதற்காகப் புல்வின்மீது உட்கார்ந்ததும், நான் குனிந்து அவளுடைய மெலிந்த கழுத்தில் முத்தமிட்டேன். அவள் சருமம் கதகதப்பாகவும் வெல்வட்போல் மென்மையாகவும் இருந்தது. என் உதடுகள் பூக்களையும் சூரிய ஒளியையும் சுவைத்தன. அவள் தடுக்கவில்லை. ஆனல், நான் அவள் முகத்தைப் பார்த்த போது, அவள் கண்கள் நீர் நிறைந்து பயந்துபோயிருந்ததைக் கண்டேன். அவள் அழத் தொடங்கிளுள். நீ ஏன் அப்படிச் செய்தாய்?’ என்று கூறி, அவள் தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டாள். நான் செய்ததில் ஏதேனும் தவறு இருந்ததா என்ன? அவளை முத்தமிட்டதில் என்ன தப்பு: அவள் மீண்டும் ஏச்சு வாங்கியதுபோல், அவள் கண்கள் கலங்கிச் சிவந்தன. ஆனால், நான் அவளே முத்தம்தானே இட்டேன்! நாங்கள் வீடு திரும்பலானுேம், திடீரென்று எங்களைச் சுற்றி புழுதிப்படலம் எழுந்தது. ஏரெவிக் நிலைகுலைந்து நின்ருள். 'ஓ, அப்பா!' என்ருள். இதற்குள் அவள் அப்பா கார் கதவைத் திறந்தார். துளசி படிந்த பூதம் ஒன்று எங்களே நோக்கி வந்தது. அப்போதுதான் கார்சோவுக்கு நான்கு சக்கரங்கள் இல்லை; இரண்டு கால்களே இருந்தன என்று கண்டேன். அவர் அவ்வளவு பெரியவராய், அகன்ற தோள்களே உடையவராய் இருப்பார் என்று நான் கனவிலும் கருதியதில்லை. "நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிருய், ஏரெவிக்? முதலில் அவள் தன் பூங்கொத்தின் பின் மறைய முயன்ருள். பிறகு மவுனமாக அதைத் தன் தந்தைக்கு அளித்தாள். ஆனல் அவர் பூக்களை மண்ணில் விட்டெறிந்தார். - "இங்கே இந்தப் பிச்சைக்காரப் பயலுடன் என்ன செய்து கொண்டிருக்கிருய்; துப்புக் கெட்டவளே?’’ என்று அவர் கத்தினர். புழுதி பூக்களை விழுங்கியது. எங்களையும் அது விரைவில் விழுங்கிவிடும். கார்சோ என் பக்கம் திரும்பினர். எச்சரிக்கை யாக நடந்துகொள், பையா! நீ உன் தகுதிக்கு மீறிய செயலில்