பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 6.3 பெண்களே, நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்! இறங்குகிருய்!” என்ருர். ஏரெவிக்கின் கூந்தலைப் பற்றி இழுத்து அவளைக் காருக்குள் தள்ளினர். அது, புழுதியைக் கிளப்பியவாறே உறுமிச் சென்றது. அந்தப் புழுதி கடுகு நிறத்தில் காணப் பட்டது. ஓ, அந்தக் காரை நன்ருகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும்! அன்று மாலை வயோதிகர்கள் பண்ணே அலுவலகத்துக்கு வெளியே கூடி நின்று பேசினர்கள் : அவர் திரும்பவும் கோபமாக இருக்கிரு.ர். அவர் ஒரு புயலில் சிக்கியிருக்கிருர்; அல்லது அவரே ஒரு புயல் மாதிரி சீறப்போகிருர்’ என்று கிழவர் மேட்டோ சொன்னர். அவர் ஏன் தன் மூக்கிற்கு அப்பால் பார்க்க முடியவில்லை என்று அவரிடம் யாராவது கேட்க வேண்டும்.’’ "அவருக்குக் கிட்டப் பார்வை. துரு அவர் கண்களைத் தின்று விட்டது. தன் காலடியில் இருப்பதை அவரால் காண இயலாது. அவர் தன் கண்களை வானத்தின் பக்கம் திருப்பியதேயில்லை. ஆ, பேசி என்ன பிரயோசனம்? அவர் துரு ஏறிய கிழ கார்சோ. அவ்வளவுதான் விஷயம்.’’ புயல் எங்கள் தலைமீது வெடித்தது. நாங்கள் சந்திப்பது சாத்தியமே இல்லை என்ருயிற்று. பள்ளிக்கூடத்தில் என்னிடம் வருவதற்குக்கூட ஏரெவிக் பயப்பட்டாள். படித்துத் தேறியதும் நான் மேல் படிப்புக்காக ஏரெவான் நகருக்குப் போனேன். சிறிது காலத்துக்குப் பிறகு, ஏரெவிக் கிற்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்று அறிந்தேன். அதன் பிறகு, துரு ஏறிய கார்சோ தன் பதவியிலிருந்து நீங்கியதுபற்றிக் கேள்வியுற்றேன். இப்போது அவர் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் பெற்றிருக்கிருர் என்றும், அவர் நடப்பதற்குத் தன் கால்களை உபயோகிக்கிருர் என்றும் ஜனங்கள் சொல்கிரு.ர்கள். நகருக்குச் செல்லும் வழி நன்கு செப்பனிடப்பட்டிருக்கிறது. இப்போதெல்லாம், கார்களின்மீதும், ஆட்களின் கண் இமைகள் மேலும், அவர்களது ஆத்மாவினுள்ளும் ஒட்டிக்கொள்ளும்படி, ரஸ்தாவில் புழுதி கிளம்புவதில்லை. என் இதயத்தின் அடியில் ஒரு இடத்தில் ஏரெவிக்கின் நினைவு நிலைத்திருக்கிறது. அவள் கழுத்து, பூக்களின் சூரிய ஒளியின் சுவையைப் பெற்றிருந்ததும் நினைவிருக்கிறது. விசித்திரம்தான்; இல்லையா, பெண்களே? ஆளுல், இது புராதன வரலாறு இல்லை, தெரியுமா? இதெல்லாம் இருபது வருஷங்களுக்கு முந்தி நடந்ததுதான்.