பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்.கிர்திச் சார்கிஸ்யன் * {}3 கேரனின் காதல் 'ஹாய், கேரன்!’ ஏரெவிக் தான் கூப்பிட்டாள். அவள் எங்கள் சன்னல்களுக்கு வெளியே தலைகாட்ட வேண்டியதுதான்; எங்களுக்கு உணர்ச்சி பொங்கும். திடீரென்று எங்கள் உள்ளங்களில் ஆனந்தம் நிரம்பியதுபோலிருக்கும். ஏரெவிக் நீலவர்ண உடையில், வானத்தின் ஒரு துணுக்குக் கீழிறங்கி எங்களிடம் வந்ததுபோல் விளங்குவாள். கேரன், மெரிஞ’’ கீதத்தைச் சீட்டி அடித்தபடி, படிக்கட்டில் இறங்கி ஒடுவான். பிறகு, ஏரெவிக்கின் கையோடு தன் கையை இணைத்துக்கொண்டு, காதல் பாதையில் வேகமாக ஒடுவான். தனது மதிப்புமிக்க வானத் துணுக்கையும் தன்ளுேடு இழுத்துக்கொண்டு போவான். முற்றம் எங்கள் கண் முன்னே இருண்டுவிடும். அரைச் செவிடாகி, முதிர்ந்து தளர்ந்துவிட்ட, எண்பது வயதுக் கிழவரான வானே கூட, அவர்களைப் பார்த்துப் பெருமூச்செறிந் தார். அவருக்கே கேட்காத, ஆனால் எங்களுக்குத் தெளிவாகக் கேட்கும் ஒரு குரலில், 'ஆ என்ன அற்புதமான பெண்! இவளைப் போன்ற ஒருத்தியை நான் முத்தமிட விரும்புகிறேன்’’ என்பார். எங்கள் பக்கத்து வீட்டு எராநூய் அத்தை அவரை ஆங்காரத் தோடு பார்த்து, 'இந்த வயசிலுமா! அவர் தன்னைப்பற்றி வெட்கப்படவேண்டும்!’ என்று கூறுவாள். ஏரெவிக் வெறுத்து ஒதுக்கிய கேரோ, எங்கள் அண்டை வீட்டுக்காரன். ஏரெவிக்கும் கேரனும் போன பின்னர் மாடிக்குப் போவான்; காளியோவின் சிரி, கோமாளி, சிரி' என்ற பாடலை-பாக்லியாக்கியின் கீதத்தை-தொண்டை வறளும் வரையில் பாடுவான். ஆனாலும், அவன் ஒருபோதும் சிரித்த தில்லை. அப்புறம், வேறு எங்காகிலும் ஆறுதல் தேடுவதற்காக அவன் வெளியே போவான். இக் காட்சி தினசரி நடைபெற்றது. அந்தப் பெண் வரா விட்டால், முற்றத்தில் வசித்த அனைவரும் கவலைகொள்வார்கள். 'இன்று சீதோஷ்ண நிலைமை ரொம்ப மோசமாகிவிடும். மழை பெய்யப்போகிறது’’ என்று கிழவர் வானே, அன்று நாள் வெகு இனியதாக இருந்தபோதிலும், அறிவிப்பார். எராநூாய் அத்தை அவரை அனுதாபத்தோடு நோக்குவாள். 'அப்பாவி மனிதர். இந்த வெயிலிலும்கூட அவருக்குக் குளிர் கிறது! வயதாகிவிட்டது, அதுதான் காரணம்’ என்பாள்.