பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்.கிர்திச் சார்கிஸ்யன் I 05 சுருங்கச்சொன்னல், கேரனும் ஏரெவிக்கும் காதலித்தார்கள். அவர்கள் காதல் எங்கள் அனைவருக்கும், என்னில் தொடங்கி கிழ வானே ஈருக, எல்லோருக்கும், நல்ல உதாரணமாக விளங்கியது. குளிர்காலத்தில் கேரனும் ஏரெவிக்கும் எங்கள் கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் தாழ்வாரத்தில் சந்திப்பார்கள். இரவில் வெகு நேரம் ஆனபின் பிரிந்து போவார்கள். 'நல்லது. நான் போகவேண்டிதுதான். எனக்கு முத்த மிட்டு விடைகொடு’’ என்று ஏரெவிக் கூறுவாள். 'நான் உன்னை வீடுவரை கொண்டுவிடுவேன்’ என்று சொல்லி, கேரன் அவளே முத்தமிடுவான். 'உனக்கு ஜலதோஷம் ஏற்படும், அன்பே, கூட வராதே’’ என்று ஏரெவிக் மிக மென்மையான குரலில் சொல்லுவாள்.

  • உனக்கு ஜலதோஷம் பிடிக்காதோ?’’ அவர்கள் விவாதிக்கத் தொடங்குவர். பிறகு கேரன் அவளை வீட்டுக்கு இட்டுச் செல்வான். திரும்பி வருகையில், உற்சாகம் இழந்தவளுய், குளிரால் பாதிக்கப்பட்டுக் காணப்படுவான். அவர்களைப்பற்றி எவரும் மோசமான வார்த்தை எதுவும் சொல்ல மாட்டார்கள்.

அவர்கள் இரண்டு பேரையும் ஒன்ருகப் பார்ப்பதே ஒரு சந்தோஷம்தான்’ என்று எராநூாய் அத்தை சொன்னுள். அவன் தேர்ந்தெடுத்திருக்கிற காதலியைப்பற்றி, கேரனின் அம்மா வெகுவாகச் சந்தோஷப்பட்டாள். தனது எதிர்கால மருமகளைப் பார்த்துக்கொண்டே, இவளைப்போல் இன்னொரு பெண்ணை இந்த நகரிலேயே காண முடியாது’’ என்று அவள் சொன்னுள், х அவள் சொன்னது சரிதான். அந்த இளம் காதலர்களின் சந்தோஷம் இரண்டு தடவைகள் ஏறக்குறைய தகர்ந்து நொறுங்கும் நிலையை அடைந்தது. இரு முறையும் காதல் அனைத்தையும் வென்றது. வசந்தம் வந்ததும். ஏரெவிக் தனது மேலங்கியை உதறி எறிந்தாள். மறுபடியும் நீலவானத்தின் ஒரு துணுக்கு பூமியில் துள்ளித் திரிவதாகத் தோன்றியது. வசந்தம் ஒவிய நிபுணனின் வர்ணப்பலகையை எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அதன லேயே பூமி நெடுகிலும் ஒரே வர்ணவிஸ்தாரம் கொட்டிக் கிடப்ப தாகவும் தோன்றியது.