பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

பெண்களே, நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்


கேரோ தன் அறைக்குள் அடைந்துகிடந்து பாட்டுப் பாடினன். கேனியோவின் துயரத்தைத் தனது துயரமாக்கிக் கொண்டான். கேரோ அந்தப் பெண்ணை அபகரித்துக் கொள்ள விரும்பியது உண்மைதானா என்று அண்டைவீட்டுக்காரர்கள் கேரனைக் கேட்டார்கள். உண்மைதான் என்று கேரன் சொன்னன். அவன் அமைதியாக இருந்தான், கேரோபற்றிப் பேசுகையில் அவன் குரலில் கோபம் தொனிக்கவில்லை. ஆனால் அவ்விஷயமாக வேறு எந்தத் தகவலும் அவன் தரவில்லை. ஆயினும், அவன் தனது ஏரெவிக்பற்றி மிகவும் பெருமைப்பட்டான்.

“நான் ஒருவன் மட்டும்தான் ஏரெவிக்கைக் காதலிக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? தம்மை மணந்துகொள்ளும்படி ஏகப் பட்ட பேர் அவளைக் கெஞ்சிக் கேட்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மறுப்புக் கூறுவதற்கே அவளுக்கு நேரமில்லை.”

கேரன் சந்தோஷமாக இருந்தான். நாங்கள் எல்லோரும் ஆனந்தம் கொண்டோம்.

திடீரென்று கோபம் மறுபடியும் அச்சுறுத்தியது.

ஏரெவிக்கின் பெற்றோர் அவர்கள் கல்யாணத்துக்குச் சம்மதிக்கவில்லை. பேராசிரியரான அவள் தந்தை அதைப்பற்றிப் பேசக்கூட விரும்பவில்லை. தன் மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கும் எண்ணமே தனக்கு இல்லை என்றும், அப்படி என்றைக் காவது செய்தாலும் ஒரு செம்மானின் மகனுக்கு அவளைக் கொடுக்கப்போவதில்லை என்றும் கேரனின் பெற்றோரிடம் அவர் சொன்னார்.

“நீர் அளவுக்கு அதிகமாக எடுக்கிறீர். உம்மால் விழுங்க முடிகிற அளவுக்கும் அதிகமாகக் கடிக்க வேண்டாம்” என்று அவர் கேரனின் தந்தையிடம் கூறினார்.

எங்கள் கட்டடத்தில் வசித்த அனைவரும் கோபமும் ஆத்திரமும் அடைந்தார்கள்.

“அவள் தந்தை ஏன் தனது மூக்கிற்கு அப்பால் பார்க்க முடியவில்லை என்று அறிய விரும்புகிறேன்” என எராநூய் அத்தை சொன்னாள்.

“அவருக்குக் கிட்டப் பார்வை. அவர் தனது ‘பெட்டிபூர்ஷ்வா’ நோக்கைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்” என்று கிழவர் வானோ முடிவு கட்டினர்.

“கேரன்!”