பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகாசி ஐவாசியன் (1925) ரகசியப் பேச்சு எகோர் பூமன்ட்ஸ் திடீரென்று தன் சொந்தக் குரலைக் கேட்டுச் சட்டென நின்ருன். நடுத்தெருவில் அவன் உரக்கப் பேசியிருக்கிருன் குழப்பமுற்று அவன் சுற்றிலும் நோக்கினன். சிறிது தொலைவில் சதுக்கத்தில் உள்ள ஒரு கறுப்புக் கட்டடத்தின் ஐந்தாவது மாடி சன்னல் ஒன்றிலிருந்து ஒரு பெண் கீழே பார்த்துக்கொண்டிருந்தாள். டாக்சி நிற்கும் இடத்தில் இரண்டு டிரைவர்கள் தங்கள் வண்டிகள் மீது சாய்ந்து நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அவை ஏரோஃப்ளோட்'டின் நகர ஏஜன்சிக் கட்டடத்தின் முன்னல் நின்றன. அந்தக் கட்டடம் உருக்குலைந்த அட்டைப்பெட்டி மாதிரித் தோன்றியது. ஒரு ஸ்திரீ ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். அவர்களில் யாருக்கும் அவன் பயனற்றவன். அவன் அமைதி அடைந்தான். ஆகவே யாரும் அவனைக் கவனிக்கவில்லை. அவனது மெலிந்த, பரிகசிப்புக்குரிய, உடலின் சேஷ்டைகளை எவரும் பார்க்கவில்லை. அவனது கூர்மையான, எரிச்சலுற்ற குரலை ஒருவரும் கேட்க வில்லை. எகோர் சவரம் செய்யப்படாத தனது மோவாயைத் தடவினன். குற்ற உணர்வால் குறுகினன். கட்டடத்தின் சுவரைத் தொட்டான். தன் வழியில் தொடர்ந்து நடந்தான். இதுபோல் தானகவே உரக்கப் பேசிக்கொண்டிருப்பதை அவன் பலமுறை உணர்ந்தது உண்டு. அநேக முறை மற்றவர்கள் கண்டிருக் கிருர்கள். அந்தக் காட்சியை எகோர் தன் மனத்திரையில் மீண்டும் கண்டபோது, வெட்கத்தால் குழம்பித் தவித்தான். எகோர் தன் கறுப்புச் சட்டையை இழுத்துவிட்டான்; பொத்தானைச் சரியாக மாட்டினன். தொப்பியைத் தலையில் அதற்குரிய இடத்தில் சீராக வைத்தான். இனிமேல் தெருவில் தானகவே பேசுவதில்லை என்று தீர்மானித்தான். 'முடிவாக நீ அப்படிச் செய்ய முடியும், எகோர் பூமன்ட்ஸ். மக்களை மாற்ற முடியாது; இது உனக்கே தெரியும். எத்தனை தடவைகள் நீ முயற்சி பண்ணுவாய்?... உன் சொந்தத் தம்பியிடம்கூட நீ ஒன்றும் செய்யமுடியாது. அதிகாலையிலிருந்தே நீ விளக்குகிருய். வீனுக்கு விளக்கிச் சொல்கிருய். அனைத்தையும் அப்படியே