பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகாசி ஐ வாசியன் # I விட்டுவிடு. அது அவன் நன்மைக்குத்தான்; அவனைப்பற்றி வேறு நினைப்பு உனக்கு இல்லை என்று நீ அவனிடம் சொல்கிருய். இதர நினைப்புகள் அபத்தமானவை, கவைக்கு உதவாதவை. அவன் கவனிக்கவில்லை; நம்பவில்லை. வார்சனிக்கிடம் இரண்டு வருஷங்கள் உன்னை நீயே வதைத்துக்கொண்டாய். ஏன்? அவளும்தான் கொஞ்சமும் கவனிக்கவில்லை. அப்போதுதான் உன் தலைமுடி நரைத்தது. அப்புறம் ஸ்ாட்டோவை எடுத்துக் கொண்டாய். இவளுடன் உன் தாடி நரைத்தது. அதன்பிறகு ஜெனியா வந்தாள்... இதற்குள் நீ களைத்துவிட்டாய். நீ பேச விரும்பவில்லை. அவள் அவளுக்காக, நான் எனக்காக! எப்படியோ நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என்று நீ நினைத்தாய்... அப்புறம் அது எப்படிச் சரிப்படும், அவள் அவளுக்காக, நான் எனக்காக’ என்பது. நல்லது, நாங்கள் எப்படியோ சேர்ந்து இருக்க நேரிட்டது. ஜனங்களைப் புரியவைப்பதற்காக அவன் செய்த முயற்சிகள் வீணுனவை என்பதை, தான் எவ்வாறு மறுபடியும் மறந்துவிட்டான் என்று எகோர் எண்ணிப்பார்த் தான். அவன் அமைதியாக விளக்க முற்பட்டான். இந்தப் பெண் தனது குறிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை, புரிந்து கொள்ளவுமில்லை என அவன் அறிந்ததும், விஷயங்கள் முன்னைப் போலவே நடந்ததை உணர்ந்தான். ஆனால் ஒரு தடவை ஆரம்பித்த பிறகு அவளுல் நிறுத்த முடியாது. அவன் விளக்கிச் சொல்வான். உடனே அவன் குரல் ஓங்கி ஒலிக்கும். பிறகு கத்தல் ஆகிவிடும். ஜெனியாவுக்கு வெறுப்பு வளரும். ஒருநாள் அவள் அவனே விட்டுப் போய்விட்டாள். அப்புறம், அவன் நண்பர்களும் அதே போல் தா ன் நடந்துகொண்டார்கள். மாக்சிம், செரோ, ஸ்க்கார் எல்லோரும் அவனை விட்டு விலகிப் போனர்கள். பின்னர் இதர ஆட்களும்கூட. எப்போதாவது அவர்கள் அவனைக் கேலியும் பண்ணினர்கள். இதோ சீர்திருத்த வாதி வருகிருர்’ என்ருர்கள். சகிக்கமுடியாத தன்னம்பிக்கை யோடும், பயங்கரமான ஞானத்துடனும், ஆரோக்கியமான நேர்பார்வையோடும் அவர்கள் அவனைப் பார்ப்பார்கள். ' என்ன ஐயா சீர்திருத்தவாதி! நீங்கள் கவனித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இதையே நான் விரும்புகிறேன். நீங்கள் கவனிப்பதில் சிரத்தை கொண்டால், எல்லாம் சீராக அமையும். ஏன் எவரும் கவனித்துக் கேட்பதில்லை?... ஜனங்கள் உமது கண்களுக்கு நேரே பார்க்கிருர்கள் வேறு விஷயங்களை எண்ணுகிருர்கள். அதாவது, அவனுக்கு எது நல்லது என்று அவனுக்கே தெரியும். நீ அவனே ஏய்க்க முடியாது. அவன் நூறுபேரை ஏமாற்ற முடியும். அவன் இவ் வார்த்தைகளையும் அறிவான்...”