பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகாசி ஜவாசியன் 夏翼岛 எகோர் ஆற்றைக் கடந்து பழைய நகரினுள் புகுந்தான். புழுதி படிந்த ரஸ்தாக்கள் வழியாகவும், குகைகளினுாடும் நடந்து போனன். கடந்த காலத்தில் அக் குகைகள் ஒற்றை அறை, இரட்டை அறை வீடுகளாக இருந்தன. இப்போது அவை காலியாய், தூசி படிந்து, இரங்கத்தக்க நிலையில் இருந்தன. பண்படுத்தப்பட்ட ரஸ்தா வெறும் பாதையாகியது. அந்தப் பாதையும் சிறிது சிறிதாகப் புல்பூண்டுகளில் மறைந்தது. பழைய நகரின் மிக உயரமான இடத்தில் எகோர் உட்கார்ந்தான். எகோருக்கு உள்ளத்தில் இன்னும் அமைதி ஏற்படவில்லை. அவனது நரம்புகளும் இதர பகுதிகளும் இடம் மாறிவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அவன் தன்னைத் தானே அமைதிப் படுத்தவும், தான் அமைதியுருமவிருக்கவும் கீழே பார்த்துக் கொண்டிருந்தான், ஆற்றின் இந்தப் பக்கம், பழைய நகரத்தில், காலியாய், வெற்றுக் கூடுகள் ஆகிவிட்ட குகைகள் துருத்திக்கொண்டு, செயலற்ற தன்மையில் சுற்றிலும் ஆச்சர்யத்தோடு பார்த்த வாறு நின்றன. சில தொழுவங்களும் ஒரு இடுகாடும் அவற்றுக்கு எஞ்சியிருந்தன. அங்கு வசித்தவர்கள் ஒளிமயமான, வசதி நிறைந்த வீடுகளுக்குக் குடிபோய்விட்டார்கள். அவர் களுக்கு வீடுகள் வெகு எளிதாகக் கிடைத்தன. அதிலும் குறிப்பாக, இக் குகைகளில் ஒன்று இடிந்து விழுந்த விபத்துக்குப் பிறகு அது வெகு சுலபமாயிற்று. எகோர் தன் பார்வையின் போக்கில், ஒத்த பரிமாணத்தில் நேராகவும் குறுக்காகவும் அமைந்திருந்த தெருக்களின் பக்கம் தன் தலையைத் திருப்பினன். நேர் தெருவின் கடைசிக்குப் பார்வையைக் கொண்டு சென்று, தலையை அந்த உயரத்துக்கு நிமிர்த்தி, பிறகு குறுக்குத் தெரு வழியாகத் திருப்பினன். தெரு வழியே கார்கள் வேகமாய்ச் சென்றன. இடைக்கிடை அவைகளில் ஒன்று திசை மாறி, குகைகளுக்கு உல்லாசப் பயணிகளைக் கொண்டு சேர்க்கும். பஸ்ஸிலிருந்து அவர்கள் கும்பலாக இறங்குவார்கள்: அதிசயித்து நிற்பார்கள்... குகையின் உச்சமான இடத்தில் அமர்ந்திருந்த எகோர் அவர்களது வியப்பைக் காணமுடிந்தது. 'மயிர் அடர்ந்த மக்கள், இரண்டு மீட்டர் உயரம் வளர்ந்தவர்கள், கல் கோடாரிகளை வைத்திருந்தவர்கள் இக் குகைகளில் வசித்திருக்கவேண்டும் என்று பயணிகளுக்குத் தோன்றியிருக்கும். எனினும், ஒரு சில வருஷங்களுக்கு முன்னரே இக் குகைகளில் ஒன்றில் எகோர் பூமான்ட்ஸ்ே வசித்தான். 8 سgچی