பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏蕙盛 ரகசியப் பேச்சு பயணிகள் குழு உச்சிக்கு வந்தது. அவர்களின் வழிகாட்டி மூச்சுவிடாமல் சொல் லி க் கொண் டி ரு ந் தான். 'இந்த ஐந்தாண்டுத் திட்டத்தில், எஞ்சியிருக்கிற குகைகளும் காலி செய்யப்படும். நிர்மாண வேலைகளில், எங்கள் நகரம் நம் நாட்டில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இக் குகைகளில் வசித்தவர்கள், இந்த அரை-அநாகரிக அறைகளே விட்டு, அதோ உள்ள சிறிய ஆற்றைக் கடந்து, காங்கிரீட்டும் டுஃபாவும் கொண்டு கட்டப்பட்ட பெரிய, விசாலமான, வெளிச்சம் மிகுந்த கட்டடங்களுக்குக் குடிடோகிருர்கள்.” 'கற்காலத்திலிருந்து நேரே இருபதாம் நூற்ருண்டி னுள்ளே' என்று ஒரு சங்கோஜப் பிரயாணி சமத்காரமாகப் பேச முயன்ருர். அங்கே வந்து பார்த்த எந்தப் பயணியும் இதே எண்ணத்தை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே சொல்வது சகஜம் என்பதை அவர் சந்தேகிக்கக்கூட இல்லை. பயணிகள் கோஷ்டி, ஒரு நூலில் கோத்ததுபோல், வரிசையாக, சிறிய தேவாலயத்தை நோக்கி ஏறிச் சென்றது. அவர்களே காண வாய்ப்பு இல்லாததனால், அங்கே வசித்தவர்கள் தினசரி திரும்பத் திரும்ப போய் அனுபவித்ததை அவர்கள் உணரவில்லை. அவர்கள் ஆலயத்தினுள்ளே போளுர்கள். மெலிந்த மெழுகுவத்திகள் ஆலயத்தில் எரிந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு பக்கத்திலும் காணப்பட்ட, ரசனையற்ற விதத்தில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அழுக்கான துணிகள், துவாலைகள், பெண்களது ஆடைகளின் துண்டுகள், மற்றும் நோயாளிகளிடமிருந்து கிடைத்த பல்வேறு உடைகளை எல்லாம் அவை வெளிச்சப்படுத்தின. ஆட்டுத்தலை ஒன்று ஒரு பீடத்தின் மேல், மெழுகுவத்திகளிடையே வைக்கப்பட்டிருந்தது. அதன் கண்கள் மூடியிருந்தன. வியப்புக்குரிய வகையில் ஒரு வருத்தம் எகோரைப் பற்றியது. பிறகு பயணிகள், எகோரையும் பழைய நகரத்தையும் தனித்திருக்கும்படி விட்டுவிட்டுப் போய்ச் சேர்ந் தார்கள். இறுகலான கால்சட்டை அணிந்த அந் நகரவாசிகள் இருவர் தண்ணிரில் பம்ப் வைத்து, இன்னும் மக்கள் வசித்து வந்த குகைகளில் ஒன்றினுள் நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தனர். எகோர் தன்னுள் எரிச்சலுற்ற பகுதியை ஒடுக்கிவிட்டதாகத் தோன்றியது. ஆயினும், தனிப்பட்ட அந்தரங்கமான தந்திரம் எதுவோ ஒன்று மறுபடியும் அவனது எரிச்சலை உற்சாகத்தோடு துாண்டிக்கொண்டிருந்தது. நீ பேசு பேசென்று பேசுகிருய். ஆனல் எவரும் உன்னைக் கவனிப்பதில்லை. நான் ஏன் கவனிக்