பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகாசி ஐவாசியன் 11 y உணர்வாய். நீ சரியாக உணர்வாய் என்பதை நீ இப்போது அறியவில்லை. நாம் ஒருவரோடு ஒருவர் பிணைந்திருக்கிருேம். எந்த ஒரு பிணைப்பும் நம் எல்லோருடைய பிணைப்புகளையும் உறுதிப்படுத்தும்.’’ எகோர் முணமுணப்பதை நிறுத்தினன். பிறகு வெறுமனே நினைத்தான். மீண்டும், பார்த்து, ' குறுக் கிடாதே, கார்ஜின். அதிகமாக உன்னைப் பொறுத்திருக்கிறது. குறுக்கிடாதே...”* எகோர் சிறிது நேரம் மவுனமாக இருந்தான். பிறகு அவன் தன் பார்வையை நகர் மீது நகர்த்தினன். கடைசி ஒரத்திலிருந்த பிரகாசமான சிவப்புக் கூரைகொண்ட வீட்டின்மேல் பதித்தான். 'அர்சுமான், நீ என்னே அப்படிப் பார்க்காதே! உனது பார்வை ஒவ்வொன்றும் என் இதயத்தை நசுக்குகிறது. நான் செத்துப்போவேன். நிச்சயமாக நான் சாவேன். நான் இறந்து விட்டால், நீ அற்பமாக உணர்வாய். நீ அதைப் புரிந்துகொள்ள வில்லை. நீ என்னைக் கவனித்துக் கேட்பதில்லை. நீயாக அறியவு மில்லை. நாம் இருவரும் அற்பர்களாக உணரவேண்டும் என்று விரும்புகிருயா? நான் சாகவேண்டும், நீ அற்பமாக உணர வேண்டும் என்று? சரிதானே, அர்சுமான்!’’ பிறகு எகோர் நோக்கினன். நகரில் உள்ள ஒரு குடிசையை தேடிக் கண்டான். வீடுகளை எண்ணிஞன். தான் தவறு செய்த தாக முடிவு கட்டி, மறுபடியும் அந்தக் குடிசையைத் தேடினன். ஆளுல், அவன் விரும்பிய குடிசையைக் கண்டுபிடிக்க இயலவில்லை. தன்னில் தானே சிறிது நாணி, நகரத்தை விட்டு வெளியே செல்லும் ரஸ்தாவைப் பார்த்துப் பேசினன்.

  • நாள லி, அன்பே நான் உனக்குச் சொன்னது உண்டு. அநேக தடவைகள் சொன்னேன். ஆனல் நீ என் பேச்சைக் கவனிக்க மறுத்தாய். நான் உண்மையாக உன்னைக் காதலித் தேன்... காதலிப்பது என்ருல் பெரிதாக ஒன்றுமில்லை என்று உனக்குத் தோன்றியது. அது வெறும் பாட்டும் ஆட்டமும் சோம்பலும்தான் என்று நீ நினைத்தாய்... நீ இப்போது வருத்த மாக இருப்பதை நீ உணரவில்லை. ஆனல் நான் உணர்கிறேன். நீ கவனிக்க மாட்டாய். நான் பேசியபோது நீ தளர்ச்சி அடைவது வழக்கம். நான் கூப்பாடு போடுகையில் நீ கோபம் கொள்வாய். உனக்காகத்தான் நான் அப்படிக் கூச்சல் கிளப்பினேன், நாஸ்லி, அன்பே...”

எகோர் வருத்தம் அடைந்தான். ரஸ்தா சிறிதாகி, மேலும் மேலும் குறுகி, அங்கேயே முடிந்துவிட்டதுபோல் தோன்றியது.