பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ? 8 ரகசியப் பேச்சு பின்னர் எகோர், காலஸ்டுடன் பேசினன். அவன் விரிவாகப் பேசினன். தான் விரும்பியதைத் தெளிவுபடுத்திய பிறகு அவன் மவுனமானன். எகோர்!’ என்று கூப்பிட்ட குரலைத் திடீரெனக் கேட்டான் எகோர், அருகில் யாரும் இல்லை. எகோர் புன்னகைத்தான். அது தெளிவாக இருந்தது. தூரத்துப் பாறையின் முகட்டிலிருந்து யாரோ என்னவோ சொல்லியிருக்கவேண்டும். அது வெகு தூரத்தில் இருந்தது; கண்ணுக்குத் தென்படவில்லை. 'நான் கேட்டேன்’ என்று எகோர் முணகினன். அப்புறம் நெடுநேரம் சிந்தித்தான். தன் எண்ணங்களைக் கூறி முடிக்கிற வரை அவன் மற்றவர்களோடு பேசினன். இறுதியில் அவர்கள் தான் சொன்னதைக் கவனித்துக் கேட்டார்கள் என்ற நம்பிக்கை எழவே, அவன் அமைதியாக மூச்சுவிட்டான். குகையிலிருந்து கீழே இறங்கினன். நகருக்குள்ளே போனன்.