பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. பெத்ரோசியன் 置湾葛 கிடப்பாய்? உன்னே நகரத்துக்கு இட்டுச் செல்லும்படி அடிக்கடி அவளேயும் இவளையும் கேட்பாய்?’ அவன் அம்மா அவனுக்கு ஒரு கவலையாக இருந்தாள். அவன் ஊருக்கு அடிக்கடி வராமல் இருந்தாலும்கூட, அம்மாவைப்பற்றிய கவலே அவன் மூளைக்குள் சதா குறுகுறுத்தது. அவன் அம்மா எரெவானில், அவன் வீட்டில், இருக்கிருள் என்று உறுதிப்படுத்துவதன் வாயிலாக, அவன் அந்தக் கவலையைப் போக்கடிக்க விரும்பினன். இந்த வாழ்வின் இறுக்கம் ஒரு கவலையால் குறையுமே. வாகன் அம்மா வுடன் சண்டை போடத் தன் மனசுக்குள் ஆயத்தம் செய்தான். 'இவ்வளவுதான் விஷயம். நாம் போகப்போகிருேம். எனக்கு நேரமில்லை. என்னைப் புரிந்துகொள்! உனக்குச் சொந்த மாணவர்களே விட்டு விலகி நீ தனியாக வசிக்கும் அளவுக்கு உன் வாழ்வில் எவ்வளவு எஞ்சியிருக்கிறது? உனக்கு வேறு யார் இருக்கிருர்கள்?’’ இன்னும் எவ்வளவு காலம் அவன் அம்மா உயிரோடு இருப்பாள்? ஒரு தடவை (அப்போது அவன் தனிச் சாவி வைத்திருக்கவில்லை) அவன் வந்தபோது, அவள் வீட்டுக்குள் இருப்பதாக அண்டை அயலார் உறுதியாகச் சொன்னர்கள். அவன் கதவைத் திரும்பத் திரும்ப தட்டினன். பதிலே இல்லை. அவன் பரபரப்புடன், பலமாகத் தட்டினன். பக்கத்து வீட்டுக் காரர்கள் கூடிவிட்டார்கள். சற்று நேரத்துக்கு முன் அவள் வீட்டுக்குள் போனதைப் பார்த்ததாக அவர்கள் அனைவரும் உறுதி கூறிஞர்கள். வாகன பயம் கவ்வியது. சன்னல் சட்டத்தை உடைத்து, ஒருவாறு உள்ளே புகுந்தான். அவன் உடல் முழுவதும் வேர்வை பெருகி ஓடியது. அம்மா தரையில் விழுந்து கிடக்கிருள்: அம்மா ரேடியோ அருகில் உயிரற்றுக் கிடக்கிருள்-இப்படிப் பலவிதமாக அவன் கற்பனை பண்ணினன். ஆளுல் அவன் அம்மா துரங்கிக்கொண்டிருந்தாள். அவள் தன் மேல்போர்வையைக் களைய மறந்து அப்படியே தூங்கிப் போளுள். 'அம்மா?’ முதலில் எச்சரிக்கையான குரலில் அவன் கூப்பிட்டான். ஒருவேளை எதிர்பாராத விதமாக அவள். 'அம்மா!’ குழப்பமடைந்து கூப்பிட்டான். அவள் கையைத் தொட்டான். சூடாக இருந்தது. நாடித் துடிப்பு அமைதியாக இருந்தது. 'ஒ! நான் தூங்கிவிட்டேன்’ என்று அம்மா விழித் தெழுந்தாள். ஓ, என்னைக் காப்பாற்று. என் வாகன் வந்திருக்கிருன், நான் துரங்கிக்கிடந்திருக்கிறேனே...”