பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 அம்மாவின் வீடு உயிர்த்த குழந்தை நன்ருகப் பிறந்து, அதன் தாய் இறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, யுத்த காலத்தின் குளிர் மிகுந்த கொடிய இரவு ஒன்றில் மரணமடையும் என்பதை அக்கா அவ்வேளையில் அறியவில்லை. யாருக்கும் எதுவும் தெரியாது. அந்தக் கணத்தில் அவர்கள் மூன்று பேரும் சந்தோஷமாக இருந்தார்கள். ரயில் நிலையத்தின் சத்தங்களால் அவன் மகிழ்ந்திருந்தான். அவளுள் உயிரோடிருந்த குழந்தையில்ை அக்கா ஆனந்தம் கொண்டாள். ஆண்மை நிறைந்த மனிதன் அவன் என நிரூபித்த மறுக்க முடியாத சான்றுகளால்-அவனுக்கு ஒரு மனைவி இருந்தாள்; ஒரு மகன் பிறப்பான்; அவன் இராணுவத்தில் சேரப் போய்க் கொண்டிருந்தான்-அவள் கணவன் சந்தோஷமாக இருந்தான். அவன் அந்தக் காட்சியை எப்போதும் நினைவுகூர்ந்தான். ஆனல் அக்காவின் முகத்தை மறந்துவிட்டான். அவன் ஞாபகத்தில் அவனுடைய அக்காள் நீலப் பனி மூட்டத்தில் இருந்த சொந்த மில்லாத ஒரு அழகியாகத்தான் தோன்றிள்ை. மற்றுமொரு டெலிபோன் அழைப்பு. • ஹல்லோ!' "அராகெல் பேசுகிறேன். வாஸ்ானுவதின் டெலிபோன் நம்பர் 1.78. ஆனால் உன் அம்மா அரை மணிக்கு முன் அங்கிருந்து போய்விட்டாள். அவள் வாஸ்ானுஷ"க்கு சாப்பாடு எடுத்துப் போளுள். ஆளுலும், கிராம சோவியத்துக்குப் போவதாகத் தகவல் கூறிவிட்டுப் போயிருக்கிருள். அப்புறம் வால்நட் வாங்க அவள் போவாள். அப்பவே நான் சொன்னேனு இல்லையா! .. இன்னொரு முறை வா. குழந்தைகளையும் கூட்டி வா. ஜாம் செய்வதை அவர்கள் ஆனந்தமாக ரசிப்பார்கள்.’’ அவள் ஏன் கிராம சோவியத்துக்குப் போக வேண்டும்?’’ 'ஏன் என்று அவளிடம் யார் கேட்க முடியும்? தன்னைத் தனக்காகவே வைத்துக்கொள்கிற ரகம் இல்லையே அவள்.’’ ஒரு கணம் அவர் பேசாமல் இருந்தார். அருமை வாகன், இது, என் புளிப்புச் சக்தி அதிகம் கூடிக்கொண்டே இருக்கிறது. ஜெர்மனியில் ஏதோ மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிருர்கள். அது உடனடியாகக் குணப்படுத்துகிறது என்றும் சொல்கிரு.ர்கள். அது சம்பந்தமாக உன்னிடம் சொல்லும்படி உன் அம்மாவைக் கேட்டிருந்தேன். சொன்னளா?’’ இரண்டு மாதங்களாக அம்மாவை நான் பார்க்கவில்லை. அறிவதற்கு நான் முயற்சி செய்வேன்.'