பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi "புத்தர்' போன்ற இந்திய நாடோடிக் கதைகளையும் அவர் ஆர்மேனிய பாஷையில் மொழிபெயர்த்தார். ஆர்மேனிய மக்கள் எப்போதும் இந்திய மக்களின் வாழ்விலும் கலாசாரத்திலும் அக்கறை காட்டி வந்திருக் கிரு.ர்கள். ரவீந்திரநாத தாகூரின் படைப்புகள் பலவற்றை ("தோட்டக்காரன்” 1922, 'தோட்டக்காரன், கீதாஞ்சலி' 1961 முதலியன) ஆர்மேனியனில் மொழிபெயர்த்துப் பிரசுரித் திருப்பதே இதற்கு மறுக்கமுடியாத ஒரு ஆதாரம் ஆகும். 1961-ல் 'இந்தியக் கதைகள்' என்ற பெயரில் ஒரு கதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. ரவீந்திரநாத தாகூர், பிரேம் சந்த், ஜெய்ஷங்கர் பிரசாத், யஷ்பால், கிருஷன் சந்தர், முல்க்ராஜ் ஆனந்த், கோபால் கால்தார், அகமத் அப்பாஸ், பிரமேந்திர மித்திரா, கமல் ஜோஷி, சரத்சந்திர சாட்டர்ஜி, சய்னேந்திரகுமார், குமுத் சாக்ஸேன, பி. ராம்நாத் ஆகியோரின் கதைகள் அதில் இருந்தன. மேலும், காம்ஸார் அவெதிசியனின் கீழ் தி சை ரத் தினம் ' (1984), மேரி மக்ஸ்பதியனின் 'ஆர்மேனிய இலக்கிய உள்ளம்பற்றி ரவீந்திரநாத தாகூரின் மதிப்பீடு' (1975), கவோர்க் கரீப் ஜானியனின் நமது நண்பன் இந்தியா' (1976) ஆகிய குறிப்பிடத்தகுந்த புத்தகங் களும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக, சோவியத் ஒன்றியமும் அனைத்து சோவியத் மக்களும் இந்திய மக்களிடம் ஒரு நட்பு உணர்வை வளர்த்து வருகின்றனர். 1917ஆம் வருஷத்திலிருந்து இதுவரை இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்கள் சோவியத் ரஷ்யாவில் 732 தடவைகள், 34 மொழிகளில், 29 லட்சம் பிரதிகள் அச்சிடப் பட்டிருப்பது ஏதோ தற்செயல் நிகழ்ச்சி அல்ல. - சோவியத் யூனியனுக்கும் இந்தியாவுக்குமிடையே உள்ள தட்பானது, கலாசார, இலக்கிய பிணைப்புகளின் பன்முக வளர்ச்சிக்கும் ஊக்கம் மிகுதிக்கும் உரிய ஆதார அஸ்திவாரங்களை உறுதியாக அமைக்கிறது. இந்தப் புத்தகம் அதற்கு ஒரு சான்று ஆகிறது. முந்தைய இலக்கியச் சாதனை சில தனிநபர்களின் பரஸ்பரத் தொடர்பில்ை உருவாயிற்று. இப்போது அது அரசு அடிப்படையில் அமைந்து, அரசின் ஆதரவு பெற்று விளங்கு கிறது. அதே சமயம், இந்தியாவிலும் சோவியத் ஒன்றியத்தின் பல தேசீய் இலக்கியங்கள் மீதும், ஆர்மேனிய இலக்கியத்தையும் சேர்த்துத்தான், பரவலான ஆர்வம் காட்டப்படுகிறது. சமீப வருஷங்களில், ராஃபி, ஹோவன்னஸ் டுமேனியன், அவெதிக்