பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.33 அம்மாவின் வீடு போக வேண்டியது அவசியம். ஒரு டாக்சி பிடிக்கும் வரை, நகர் போய் சேர்கிற வரையில்... அவன் ஆடை அலமாரியின் கதவை, வழக்கமில்லாத ஒரு சோகத்துடன் சாத்தினன். மவுன மாக இருந்த டெலிபோனே நோக்கினன். சன்னலின் வழியே, தெளிவான பணிக்கால வானத்தைப் பார்த்தான். அவன் கதவைப் பூட்டிக்கொண்டிருக்கையில், டெலிபோன் மறுபடி அலறியது. அமைதியாக, அவசரம் இன்றி, அவன் சாவியைப் பூட்டில் மும்முறை சுழற்றினன். பிறகு கதவை லேசாக அழுத்தின்ை. பூட்டிக்கொண்டதா என்று பார்த்தான். இன்னும் டெலிபோன் பொறுமையாக மணி அடித்துக்கொண் டிருந்தது. அது அராக்கெல் ஆக இருக்கலாம்; அல்லது அம்மா வாகவும் இருக்கலாம். இறுதியில், அவள் இருக்கும் இடத்தைத் தெரிந்து அராக்கல் அவளிடம் செய்தி தெரிவித்திருக்கக்கூடும்.