பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூஷேக் கால்ஷோயன் (1933) அழைபபு 1. அலே-ஏஹ்.. அலெஹ், என் கண்ணே, அலே-ஏ-ஏஹ்...' ஒரு கிழவன் தன் கைக்கோலில் சாய்ந்தவாறு பாடிக் கொண்டிருந்தான். ஆடுகள் மந்தை மந்தையாக மலைச் சரிவின் மீது திரிந்துகொண்டிருந்தன. ஆனல் ஸோரோ. ஆளுல் கிழ ஸோரோ ஆடு மேய்க்கும் இடையன் அல்ல. கிராமத்துக்குப் பொதுவாக ஆடுமேய்ப்பவர் எவரும் இல்லை. ஊர்வாசிகளே முறை வைத்து ஆடுகளைக் கவனித்துக்கொண்டார்கள். அன்று ஸோரோவின் முறை. எனினும், ஸோரோ தன் கோலின்மீது சாய்ந்து பாடிக்கொண்டிருந்தான். 'அலே-ஏஹ்...! அலெஹ், என் கண்ணே, அலே-ஏ-ஏஹ்!’’ சூரிய உதயத்திலிருந்து அவன் அவ்வாறு அழைத்துக்கொண்டிருக் கிருன். ஓ, அது எப்போது நிகழ்ந்தது? மீண்டும் வசந்தம் வந்து விட்டது. எத்தகைய நீலமான, கனிவான காலை நேரம்! உலகமே நீலமயம். மாருதா மலை தன் முகத்தின்மேல் நீலத்திரை போர்த்திருந்தது. பள்ளத்தாக்குகளும் மலே இடுக்குகளும் நீல வானத்தால் நிறைந்திருந்தன. கணவாய்கள் மற்றும் மலைச் சரிவுகள்மீது அமைந்திருந்த குக்கிராமங்கள் நீலமாய் மூச் சுயிர்த்தன. தூரத்து தால்வாரிக் நதி கட்டவிழ்த்துவிட்ட நீலம் பள்ளத்தாக்குகளில் வெள்ளமாய்ப் பெருகியது. குழப்பமுற்று ஆடுகளும் குட்டிகளும் மாருதா மலையின் ஒரத்தைக் கண்டு கொண்டதும் உலகத்தோடும் வசந்தத்துடனும் பழக்கம் கொள்ளத் தொடங்கின. எச்சரிக்கை அடைந்த இளம் பிராணிகள் தங்கள் வாய்களாலும் நாக்குகளாலும், கற்களே, கற்கள் மீது படிந்த அலங்காரப் பாசிகளைத் தொட்டு உணர்ந்தன; மண் வாசனையை நுகர்ந்தன; முட்களிலிருந்தும் புல்லிலிருந்தும் பின் வாங்கின. குருவிகளின் படபடப்பைக் கேட்டு மிரண்டு துள்ளின. இளம் பிராணிகள் உலகத்தோடும் வசந்தத்துடனும் உறவாடின. ஆளுல், ஸோரோ-அதோ ஒரு பையனாக இருந்தான். பத்துப் பதினெரு வயதுச் சிறுவன், வெள்ளாட்டின் ரோமத்தால்