பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவுேக் கால்ஷோயன் 芷岛9

  • ஆகவே, இவள் உன் மனைவியா?. உனக்குச் சந்தோஷம் பெருகட்டும்’ என்ருன், உடனே ஒயின் எங்கே?' எனக் கேட்டான்.

வீட்டுக்காரன், அளவு கருவியான ஒரு பித்தளைப் பாத் திரத்தில் ஒயின் நிரப்பி, அதைக் கண்ணுடித் தம்ளருடன் ளோரோவிடம் ருசி பார்க்கக் கொடுத்தான். ஆளுல், ஸோரோ பாத்திரத்தில் இருந்ததை அப்படியே பருகினன். ஒரே வாயில் அதை காலி பண்ணிவிட்டு, தன் பாராட்டுதலைக் கூறினன். 'வெகு அருமை!’’ அவன் உள்ளங்கையினல் மீசையைத் தடவிக்கொண்டான். 'என் உள்ளம் குளிர்ந்தது. இவ்வளவு ருசியான ஒயின் இதுவரை என் உதடுகளில் பட்டதேயில்லை, அலெஹ். அது உண்மையிலேயே சுவை மிக்க மது!’ அவன் தலை குனிந்திருந்தது, அறையின் மூலையில் நின்ற முதியவளின் செருப்புகள்மேல் அவன் பார்வை படிந்திருந்தது. அவன் மகனிடம் பேசின்ை: 'பார் மகனே, உதயத்திலிருந்து இப்போது வரை நாம் ஏன் கிராமம் கிராமமாகப் புகுந்தும்கூட வெறும் கைகளுடன் வெளியேறினுேம் தெரிகிறதா? இதுதான் நான் விரும்பிய ஒயின். வேறு எதுவுமில்லை... ஊற்று!’’ எவ்வளவு? என்ன விலை?’ என்று வீட்டுக்காரன் கேட்டான். 'ஜாடி முழுவதும் எனக்குத்தான். ஸோரோவின் குரல் சண்டை பிடிப்பதுபோல் ஒலித்தது. விலையையும் கணக்கை யும் கேட்காமல் ஊற்று. இந்த மது விலைமதிப்பு இல்லாதது. ஒயினின் மதிப்பு மீண்டும் ஒயினேதான். அலெஹ்.. ஊற்று!’ வீட்டுக்காரன் அளவு பாத்திரத்தை எடுக்க வந்தான். ஆளுல் ஸோரோ அதைக் கொடுக்கவில்லை. வேறு எதைக் கொண்டாவது ஊற்று. இது என் கிளாஸ்.’’ நின்றவாறே அவன் குடிப்பதைத் தவிர்க்க வீட்டுக்காரன் பெரிதும் முயன்ருன். வீடு இருக்கிறது, மேஜை இருக்கிறது: அவர்கள் மனிதர்களாக மேஜை முன் அமர்ந்து பேசலாம், சரியானபடி அறிமுகம் செய்துகொள்ளலாம்; அதிலும் விசேஷ மாகப் பழைய நண்பர்கள் திரும்பவும் சந்தித்திருக்கிருர்கள் என்றெல்லாம் சொன்னன். ஆனல் லோரோ கேட்கவில்லை. மகன் சாடை காட்டினன். ஆனால் லோரோ, அந்த இடத் திலேயே நின்று, ஜாடியிலிருந்து நேராக எடுத்து, அளவு பாத்திரத்தைக் கொண்டே குடிக்க விரும்பின்ை.