பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii இஸாகியன் ஆகியோரின் படைப்புகள் சில பிரசுரிக்கப்பட்டிருக் கின்றன. பெண் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ரனதா காம்புலின் ஆர்மேனிய மொழியைக் கற்றிருக்கிருர். அவர் ஆர்மேனிய மூலத்திலிருந்து வங்காளியில் மொழிபெயர்க்கிரு.ர். விரா நவின் குமாரி தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிரு.ர். 1961-ல் எஸ். கே. சாட்டர்ஜி ஆர்மேனிய வீர காவியங்களும், சாசூனின் டேவிட் இதிகாசமும்’ என்ற கவனத்தை ஈர்க்கும் ஒரு வெளியீட்டைத் தயாரித்தார். 1925-ல், ரவீந்திரநாத தாகூர் இத்தாலிக்குச் சென்றிருந்தபோது செயின்ட் லாஸர் எனும் தீவில் இருக்கிற ஆர்மேனிய மெக்கிதாரியன் சங்கத்தைப் பார்வை யிட்டார். "செயின்ட் லாஸரைப் பார்ப்பதற்காகவே இத்தாலிக்கு வரலாம். அது பயனுள்ளதாகும்' என்று அவர் குறிப்பிட்டார். அவருடைய வாழ்த்துச் செய்தி மெக்கிதாரியன் மாசிகையான பாஸ்மாவெப் பில் (1925, எண் 2) இவ்விதம் பிரசுரமாகி யிருக்கிறது: "ஆரிய இனம் என்ற மகாவிருட்சத்தின் வெவ்வேறு கிளைகளாவோம் நாம். உங்கள் நாளங்களில் ஒடுகிற இரத்தம் எங்கள் இரத்தம் ஆகும். உங்களில் இருக்கிற சகோதரத்துவத்தை இன்று நான் உணர்ந்தேன்.’’ . ஆர்மேனிய மக்களுக்கும் இந்திய மக்களுக்குமிடையே நிலவுகிற சகோதரத்துவமும் நட்புறவும் நூற்ருண்டுகளின் ஆழத்தில் ஊடுருவிச் செல்லும் ஒரு வரலாற்றைக்கொண்டிருக் கிறது. பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதியில், தங்கள் சொந்த நாட்டில் துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆர்மேனியர்கள். ஒரு பெருங் குழுவினராக, சென்னை மாநகரில் குடியேறினர்கள். சிறிது சிறிதாக இயக்க உணர்வுபெற்றும், இந்திய மக்களின் அன்பான உபசரணை தந்த பலத்தினலும், பதினெட்டாம் நூற்ருண்டில், ஆர்மேனியர் பரவலான கலாசார, தேசீய விடுதலை நடவடிக்கைகளைப் பிரசாரம் செய்யத் தொடங் கினர். 1772-ல் ஹகோப் ஷாஹாமிரியன் ஆர்மேனிய அச்சகம் ஒன்றை நிறுவினர். தேசிய லட்சியத்தின் புதிய மறுமலர்ச்சியின் பிரதிநிதிகள் தயாரித்த மதிப்பு மிகுந்த நூல்களை அது வெளியிட்டது. மோவ்ஸ்ஸ் பாக்ரமியானின் எச்சரிக்கை என்ற புதிய பதிவேடு', ஷாஹாமிர் ஷாஹாமிரியனின் கீர்த்திப் பிரதாபங்கள் எனும் ஒரு நூல்’, அல்லது வெறுமனே "கீர்த்திப் பிரதாபங்களின் வலை’ போன்றவை குறிப்பிடத்தக்கன. இந்தியாவில் குடியேறிய ஆர்மேனியர்களின் குறிப்பிடத்தகுந்த பிரதிநிதிகளில் மற்ருெருவரான ஹாவ்ஸெப் எமின் எழுதிய நூல்களும் அந்த மனோபாவத்தையும் உணர்ச்சியையும் பிரதி பலிக்கின்றன. 1794 அக்டோபர் 16ஆம் நாள் ஹாருத்யுன் 2