பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3 அழைப்பு விடாது பிடித்து நின்முன். இந்த ரொட்டியின் பெயரால், ஒயின் பெயரால், ஜீவிக்கும் ஆண்டவன் பெயரால் சொல் கிறேன். உனது ஜாடிகளை நான் தூள்தூளாக நொறுக்குவேன். நீ என்னே வெளியே துரத்துகிருய்; அப்படித்தானே? அலெஹ் ...!" மகனும் வீட்டுக்காரனும் சேர்ந்து அவனே வெளியே இழுத்து வர நேர்ந்தது. அப்படி இழுக்கப்பட்டபோது, ஸோரோ கூப்பிட்டுக்கொண்டேயிருந்தான். அங்குமிங்கும் அலெஹைத் தேடினன். அவளைக் காணவில்லை. முதியவள் உள்ளம் உருகி மூலையில் குறுகி உட்கார்ந் திருந்தாள். அவளுக்குக் கால்கள் விளங்கவில்லை. விடாது அழுதுகொண்டேயிருந்தாள். வெளியே அலெஹ்” என்று கூப்பிட்ட குரலை அவள் கேட்டாள். அவளே யாரும் அவ்விதம் அழைத்ததில்லை-அவ்வளவு அன்பாக, அவ்வளவு இதய பூர்வமாக, அவ்வளவு ஆசையோடு, ஒரு பிரார்த்தனேபோல், ஒரு பாடல்போல், தூரத்து மலைகளிலிருந்து வந்த எதிரொலி போல்... அலே. ஏ. எஹ்!’’ கொஞ்சம் கொஞ்சமாக அந்த அழைப்பு எட்ட எட்டப் போயிற்று. ஸோரோ இருண்ட தெருவில் கூப்பிட்டான். அவர்கள் ஊரைவிட்டு வெளியேறிய பின்னும் அவன் அழைத்தான். துரங்குகிற வரை அவன் அவ்விதம் அழைத்துக்கொண்டே யிருந்தான். உறக்கத்தில் அவன் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன: அலெஹ்..!’ 3. அலே-ஏஹ்.. அலெஹ், என் கண்னே, அலே-ஏ-எஹ்...' கிழவன் தன் கோவின் மீது சாய்ந்தவாறு திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருந்தான். ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் சரிவின்மீது ஏறி வந்தார்கள். ஸோரோவின் பேரக் குழந்தைகள் அவர்கள். அவனுடைய இளைய மகனின் பிள்ளைகள். அவன் கல்யாணத்துக்குத்தான் ஸோரோ அலெஹின் வீட்டிலிருந்து ஒயின் வாங்கி வந்தான். - கல்யாணத்துக்குப் பிறகு, அலெஹைப் பார்ப்பதற்காக அவன் சமவெளிப் பக்கம் போயிருந்தான். அப்புறம் மாரிக் காலம் வந்தது. பிறகு வசந்தம் வந்தது. லோரோவுக்குச் சதா ஏதாவது ஒரு வேலை இருந்தது. அன்ருடக் கவலைகள் அலைக் கழித்தன. எப்பவாவது அவன் நினைத்துக்கொண்டான். சம வெளிப்பக்கம் போகவேண்டும் என்று மனசில் தீர்மானித்தான். ஆனல் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு தடங்கல் குறுக் கிட்டது. இந்த விதமாக வருஷங்கள் ஓடிவிட்டன.