பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூஷேக் கால்ஷோயன் It 45 அவன் தனது தலையில் அடித்துக்கொண்டான்; முதலில் கம்பாலும் பிறகு முஷ்டியிலுைம், அடி அவனுக்கு ஒரு புதிய கருத்தை உண்டாக்கியது. 'கடவுளே, என் தலை வெடிக்கட்டும்! ஏன் அலெஹைப் பார்க்கப் போகவேண்டும்? அவளைப் பார்க்கப் போவானேன்? நான் போய் அவளையே இங்குக் கொண்டு வருவேன்’ என்று நினைத்தான். கிழவி குழம்பிப்போய் கலக்கத்தோடு நின்ருள். 'நீ என் வழியில் நிற்கிருய்' என்று திரும்பவும் ஆரம்பித் தான் லோரோ. "சரியாகத்தான் சொன்னர்கள்-ஆர்மேனியர்களுக்கு புத்தி பிந்தித்தான் வரும் என்று. அது மட்டும் சரியான சமயத்தில் வந்திருந்தால், நான் அன்றைக்கே, ஒயின் வாங்கிய தினத்திலேயே, அலெஹை என்னுடன் இட்டு வந்திருப்பேன்’ என்று எண்ணிஞன். 'உன் பிள்ளைகள், உன் மகள்களும் மகன்களும் எனக்குக் குறுக்கே நிற்கிருர்கள்.' "அன்றைய தினமே நான் அலெஹைக் காரில் வைத்து இங்கே ஒட்டி வந்திருக்கவேண்டும்’ என்று அவன் நினைத்தான். ஆனல், அவன் மகன் எதிர்த்திருப்பான், அவனே அப்படிச் செய்யவிட்டிருக்கமாட்டான் என்ற எண்ணமும் அவனுக்கு ஏற்பட்டது. 'அந்த வேளையில் உன் இரண்டாவது மகன் என் வழியில் குறுக்கே நின்ருன். இப்போது உன் இளைய மகன். நான் அவன் கைக்குள் வசிக்கிறேன்... இந்த வீடே ஒரு சிறைதான். என்னுல் மூச்சுவிட முடியவில்லை அதில்... இனி நான் தனியாக வசிப்பேன்.” லோரோவின் தீர்மானம் விரைவாகவும் முடிவானதாகவும் அமைந்தது. "அதோ அந்தக் குடிசையை இன்று நான் ஒழுங்கு படுத்துவேன். உதயத்தில் போய் அலெஹை இங்கே கொண்டு வருவேன்' என்று லோரோ எண்ணிஞன். என்ன செலவானுலும் சரி, நான் வி வா. க ரத் து ப் பண்ணுவேன். கடவுளே, நான் நிச்சயம் செய்வேன்' என்று கத்தினன். அவர்கள் சம்மதிக்கவில்லை என்ருல், நான் அவளைக் கடத்திக்கொண்டு வருவேன்’ என்று ளோரோ தனக்குள் தீர்மானித்தான். ஆ-10