பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

琏3 அழைப்பு என் கண் முன்னே காணமுடிகிறது. உனக்கு நினைப்பிருக்கிறதா? உன் தலையில் ஒரு பூமாலே இருந்தது. நீ, சின்னஞ்சிறிய பெண். கல்லுக்குக் கல், ஒரு கல்லிலிருந்து இன்னெரு கல்லுக்குத் தாவிக் குதித்தாய். நினைவிருக்கிறதா? அந்த நாள் தான், விசேஷமான அந்த நாளில்தான், என் இதயம் தெறித்தது...”* முந்திய சந்தர்ப்பத்தைப் போலவே இப்போதும் நிகழ்ந்தது. ஸோரோ தன் முழு உயரத்துக்குத் தன்னை நிமிர்த்திக் கொண்டான். அவன் கண்கள் கலங்கின. தூரத்து மலைகளைப் பார்த்தவாறே........ கிழவி, அமைதியின்றி அவன் முன் நின்று, பாதி மூடிய அவனது விழிகளேத் திருத்தமில்லாது பார்த்துக் கொண்டு. " உள்ளே போகலாம், சகோதரன் லோரோ,’’ 'இல்லை. உள்ளே வேண்டாம்; உள்ளே வேண்டாம்; என் கண்னே’’ என்று லோரோ பலமாக ஆட்சேபித்தான். தோட்டத்தின் உட்புறத்தில் இளம் ஆப்பிள் மரம் ஒன்று நின்றது. அங்கே, அந்த மரத்தடிக்கு!’ என்ருன் அவன். பிறகு, பித்தளேப் பாத்திரத்தில் ஒயின் கேட்டான். தன் கம்பை எடுத்துக்கொண்டு நடந்துபோய் ஆப்பிள் மரத்தின் கீழே உட்கார்ந்தான். என் வியாபாரம் நேர்மையானது, அலெஹ்.’’ முதியவளின் கையிலிருந்து அவன் ஒயினை எடுத்துக்கொண்டான். 'மாராதுக் எனக்கு உதவிபுரியட்டும்!’ என்ருன். ஒயினைக் குடித்துவிட்டு வியாபார ரீதியில் அமர்ந்தான். - நல்லது. ஸோரோ ஏன் வந்திருக்கிருன் என்று இப்போது கேள். ’’ 'நாம் அறிமுகமானவர்கள். நண்பர்கள்கூட, சகோதரன் ஸோரோ. ஒரே ஊர்க்காரர்கள். இவ்விதம் பார்க்க வருவது சர்வசாதாரணம். உலகம் நெடுகிலும் சகஜம்தானே!’’ 'இவ்வளவுதான, அலெஹ்?... நான் உன்னிடம் சொல்லிக் கொண்டிருந்தேனே. ஸோரோ ஏப்ரிகாட் மரத்தை நோக்கிக் கையை நீட்டினன். 'அந்த நாள் இன்றுபோல் இனிமையானது. என் இதயம் உனக்காகச் சிதறியது. அலெஹ்.’’ ஸோரோ பதிலுக்காகக் காத்திருந்தான். ஆனல் முதியவள் அவனே விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். 'தின்பதற்கு ஏதாவது கொண்டு வரட்டுமா, சகோதரன் ளோரோ???