பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii ஷ்மாவேனியன் முதலாவது ஆர்மேனிய சஞ்சிகையான அஸ்தரார்'ஐச் சென்னையில் பிரசுரித்தார். 1707-ல் செயின்ட் நாசரத் சர்ச் கல்கத்தாவில் நிறுவப் பட்டது. 1881-ல் ஆர்மேனியன் மனிதாபிமான ஜிம்னுளியம் (தேகப் பயிற்சிசாலை) அமைக்கப்பட்டது. இவை இரண்டும் இன்றும் இயங்குகின்றன. 1797-ல் கல்கத்தாவிலும் ஒரு ஆர்மேனிய அச்சகம் செயல்படத் தொடங்கியது. மெஸ்ரோப் தாகியடியனின் புராதன இந்தியாவின் வரலாறு’ (1841), 'ஸாசும் லாந்திபியும்' என்ற கவிதை (1847) ஆகியவற்றை அது பிரசுரித்தது. வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு ஆர்மேனியப் பத்திரிகைகள் இந்தியாவில் பிரசுரிக்கப்பட்டன. இந்தியாவில் வசித்த ஆர்மேனியர்கள் தங்கள் சொந்த விவகாரங்களில் மட்டுமே அக்கறை கொண்டிருக்கவில்லை. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடிய இந்திய மக்களின் தேசீய விடுதலை இயக்கங்களிலும் அவர்கள் கலந்து கொண்டார்கள். இவ்வகையில், கார்ஜின் கான் (கிரிகோர் ஹார்யுத்யுனியன்) புகழ் பெற்றவர் ஆவார். இன்றும் இந்தியாவில் ஆர்மேனியர்கள் இருக்கிரு.ர்கள். கல்கத்தாவிலும் சென்னையிலும் ஆர்மேனியர்கள் வசிக்கிரு.ர்கள்: ஆர்மேனிய தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், தெருக்கள் புராதனக் கட்டடங்கள் ஆகியனவும் இருக்கின்றன. இரண்டு மிகப் புராதனமான நாட்டினரிடையே தோன்றிய நட்புறவும் சகோதரத்துவமும் இன்றும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. இந்தியாவில் ஆர்மேனிய உரைநடை இலக் கியத்தின் இந்தத் தொகுதி பிரசுரமாவது இந்த உண்மைக்கு மிகச் சிறந்த சான்று ஆகிறது. இத் தொகுப்பில் மிகச் சமீப காலத்திய ஆர்மேனிய உரைநடையின் சிறந்த படைப்பாளிகள் (ஹோவன்னஸ் டுமேனியன், அவெதிக் இஸ்ாகியன், தொரணிக் தெமிர்ச்யன், ஸ்டீபன் ஸோரியன், அக்செல் பாகுன்ட்ஸ், வாகன் டோடோவென்ட்ஸ்), சமகால முதிய தலைமுறையினர் (வாக்தாங் அனன்யன், லெரோ கான்ஸ்ாடியன், காஷாக் ஜியுல்நஸாரியன்), மற்றும் மத்திய தலைமுறையைச் சேர்ந்தவர் களின் (அபிக் அவாகியன், எம்.கிர்திச் சார்கிஸ்யன், ராபேல் ஆராம்யன், மூஷேக் கால்ஷோயன், பெர்ச் செய்துன்சியன், காரென் சிமோனியன்) கதைகளும் சிறுகதைகளும் அடங்கியிருக் கின்றன. - X- - ೩55 நூற்ருண்டின் ஆரம்பத்தில் ஆர்மேனிய உரைநடை இலக்கியம், சின்ன மனித”னின் உருவம், அவனது உளஇயல்,