பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置5● அழைப்பு பாபம் என் உள்ளத்தில் இருக்கிறது, அலெஹ்.. வா, உன் இடுப்பு வாரைக் கட்டிக்கொள். நாம் போகலாம், என் கண்னே!’ முதியவள் திகைப்படைந்து, எங்கே?' என்று கேட்டாள். "எங்கே என்ரு கேட்கிருய்? பின்னே நான் யாருக்காக அந்தக் கதை எல்லாம் சொன்னேன் அலெஹ்? வா, நாம் ஒன்ருகச் சேர்ந்து நம் கிராமத்துக்குப் போவோம். நன்மையைக் கருதி நான் என் வீட்டிலிருந்து விலகிவிட்டேன். எனக்கு இன்னும் சில வருஷ வாழ்வே எஞ்சியிருக்கிறது. அந்த வருஷங் களே நாம் இருவரும் ஒன்ருய்ச் சேர்ந்து, மாராதுக்கின் விருப்பத்துக்கிணங்க வாழ்வோம்.’’ - இவனுக்குப் பைத்தியமா?’ கிழவி தன் வாயைக் கையால் பொத்திக்கொண்டு, தனிமொழிபோல் பேசினள். லோரோ முன் வைத்த ஒயினே எடுத்துவிடத் தயக்கத்துடன் முயன்ருள். 'இல்லை. ஒயின் இல்லை...! அதுக்கும் ஒயினுக்கும் என்ன சம்பந்தம்? அது ஒயினால் ஏற்படவில்லை. அலெஹ். இதல்ை வந்தது. அவன் கையைத் தன் இதயத்தின்மேல் வைத்தான், 'இதுதான், என் கண்ணே. இதுவே. யாருக்காக நான் அந்த நேர்த்தியான கதையைச் சொன்னேன், அலெஹ்? நீயும் நானும், நமது இரண்டு தலைகளையும் ஒரே தலையணையில் வைத்துப் படுப் பதற்கில்லை என்ருல், பின் அந்தப் பிரகாசமான காலை நேரம் உலகத்துக்கு ஏன் வந்தது?...” அது உண்மையாக வருவதற்கில்லை என்ருல், அது உண்மை யாகவே நிகழாது போகுமானல், அந்த நீல வர்ணக் காலை ஏன் பிறந்தது? ஸோரோ தனது சின்னஞ்சிறிய அன்பான அலெஹை அன்று காலையில் கண்டு, மாலைக்குள் இழப்பது என்ருல், அந்தப் பிரகாசமான காலை ஏன் நிலைத்திருந்தது, அலெஹ்?... உலகத்தின் பாபத்தை அதிகப்படுத்துவதற்காக அது வந்துவிட்டு அகன்று போனதா? அது லோரோவின் உள்ளத்தை ரணப்படுத்திவிட்டுப் போக வந்ததா? உலகத்தில் இத்தகைய இனிமையான விஷயம் இருக்கிறது என்று ஸோரோவிடம் சும்மா சொல்லிப் போகவா வந்தது, அலெஹ்? அது ஒரு கனவா? அழகிய கதையா? இல்லை. அந்த ஒளிமயமான காலே இருந்தது, இன்னும் இருக்கிறது. வா. உனது இடுப்பு வாரை மாட்டிக்கொள். நாம் போவோம்.’’ ஸோரோவின் குரல் அதிகாரத்துடன் தொனித்தது. ‘’சகோதரன் ஸோரோ, நீ உன் அறிவை இழந்துவிட்டாய்.” முதியவள் வருத்தப்பட்டாள்.