பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூஷேக் கால்ஷோயன் 罩器置 'நான் உன்னை பலவந்தமாய்த் தூக்கிப் போவேன்’ என்று ஸோரோ தரையை முஷ்டியால் தட்டிக்கொண்டே சொன்னன். கிழவி தன் உள்ளங்கைக்குள் அடக்கமாகச் சிரித்தாள். 'நீ என்னை எப்படிக் கடத்திச் செல்வாய், சகோதரன் லோரோ??? "நீ ரொம்பச் சின்னவள். ஒரு கைப்பிடி அளவே இருக் கிருய். நான் உன்னை ஒரு பைக்குள் திணித்து. ஊரைவிட்டு வெளியேறுகிற வரை சிரமமாக இருக்கும். அதன் பிறகு உலகம் முழுவதுமே என்னைத் துரத்தி வந்தாலும் அலெஹ் என்னுடைய அலெஹ் தான் நான் உன்னைக் கடத்திப் போவேன்’ என்று ஸோரோ உறுதியோடு திரும்பவும் சொன்னன். முற்றத்திலிருந்து ஒரு ஆண்குரல் அலெஹைக் கூப்பிட்டது. அந்தக் குரல் டெலிபோன் அழைப்பு மாதிரி, ஹல்லோ..!’’ என்று லோரோ காதில் விழுந்தது. அது என் கணவர்’ என்று முதியவள் அவசரமாக எழுந்தவாறு சொன்னாள். 'உன் புருஷன் நல்ல மனிதன்தான். ஆனலும் நான் உன்னைத் தூக்கிப் போவேன்; இரவில்.’’ அவன் அவள் ஆடை விளிம்பைப் பற்றி இழுத்து, ரகசியமாகச் சொன்னன்: 'உன் வாயை மூடிக் கொண்டிரு. ஒரு வார்த்தையைக்கூட வெளியிட்டுவிடாதே!’’ கிழவி திரும்பவும் அடக்கமாகச் சிரித்தாள். முன்தான ஒரத்தால் வாயைத் துடைத்துக்கொண்டாள். 'எழுந்திரு, சகோதரன் லோரோ. வீட்டுக்குள் வா.’’ வீட்டுக்குள் நான் என்ன செய்யக் கிடக்கிறது? நான் ஊருக்கு வெளியே பதுங்கியிருப்பேன். இருட்டு வந்ததும், திரும்பி வந்து உனக்காகக் காத்திருப்பேன். கடவுள் பேரால் சொல்கிறேன், நான் அவ்விதம் செய்வேன்.” வீட்டுக்காரன் மறுபடியும் கூப்பிட்டான். நான் இங்கே இருக்கிறேன். சகோதரன் ஸோரோ வந்திருக்கிருர்’ என்று அலெஹ் பதிலளித்தாள். ஸோரோ திரும்பவும் கிழவியின் ஆடையைப் பற்றி இழுத்தான்! பற்களைக் கடித்தான்; முஷ்டியை ஆட்டினன். 'நான் உன்னைத் தூக்கிப் போவேன், அலெஹ். என்ன ஆனாலும் சரி, நான் உன்னைக் கடத்திச் செல்வேன்' என்று முணுமுணுத்தான்.