பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宽5路 அழைப்பு வீட்டுக்காரன் அங்கே வந்தான். 'நல்லது! நீயா? வாவா. ஒயின் வேண்டுமா?’ என்று கேட்டுச் சிரித்தான்.

  • மிக அதிகம் தேவை, சகோதரா என்று ஸோரோ ஒப்புக்கொண்டான். 'உன் ஒயினைப்போல் உலகத்தில் வேறு எங்குமே இல்லை. இருக்கவும் இருக்காது. பெருமைப்படுவதற்கும், என் தலையை உடைப்பதற்கும் உனக்கு உரிமை இருக்கிறது.'

இப்படியும் அப்படியுமாக, அந்தக் குடும்பம் கூடியது. இரண்டு மகன்கள், இரண்டு மருமகள்கள், பேரக் குழந்தைகள் எல்லோரும் கூடி, உணவு உண்ண அமர்ந்தார்கள். 'கலகலப்பான ஒரு வீட்டின் சாப்பாட்டு அறைதான்' என்று ஸோரோ பாராட்டுதலாக எண்ணினன். 'கல்யாண விருந்து மாதிரி. மாராதுக் பேரால், இது எனக்கும் அலெஹ"க்கும் கல்யாணம்.” அது உண்மையிலேயே சந்தோஷமான குடும்பம்தான். அலெஹின் மகன்கள் உற்சாகத்தோடு இருந்தார்கள். அவன் ஒயின் வாங்க வந்த தினத்தில் அவர்கள் வீட்டில் இல்லை. பிறகு அவர்கள் தெரிந்துகொண்டார்கள்-ஒரு ஆள் வந்தான். அவர் களுடைய அம்மாவின் ஊரைச் சேர்ந்த வயோதிகன். சுவாரஸ்ய மான மனிதன். அவன் பித்தளேப் பாத்திரத்தால் மிக நிறைய ஒயின் குடித்தான். பாடினன், குடித்தான். குடித்தான், பாடினன். அவனே நிலவறையிலிருந்து சிரமத்தோடுதான் வெளியே கொண்டுவந்தார்கள். பிறகும் அவன் திரும்பி வந்தான். ஆனால், பரிதாபம், அப்பொழுதும் அவர்கள் அவனைப் பார்க்கவில்லை. இதோ அந்த சுவாரஸ்யமான கிழவன் இப்போது அவர்களின் விருந்தாளி. அவன் அடர்த்தியான வெள்ளை மீசை வைத்திருக்கிருன். ஆழ்ந்த சுருக்கங்கள் கொண்டிருக்கிருன். உரக்கப் பேசுகிருன். மதுவைச் சுவைத்து அடிவரை குடிக்கிருன். உடனேயே தன் கிளாஸை நிரப்புகிருன், நீங்கள் எங்களுக்கு மாமா' என்ருன் இளைய மகன். அவன் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தான். எங்களுக்கு அம்மா வழியில் பந்துக்களே இல்லை. நீங்கள்தான் உண்மையில் எங்கள் அம்மா வழி மாமா.’’ "நீ என்னை அந்நியனுக, அல்லது உன் மாமாவாக மதிப்பது உன் சொந்த விஷயம் என்று மனசுக்குள் பதில் கூறினன் ஸோரோ. ஆளுல் இன்றிரவு நான் உன் அம்மாவைக் கடத்திச் செல்லப்போகிறேன். நான் அவளைத் துரக்கிப்போவேன், பையா.” இளைய மகன் அதிகம் அம்மாவை ஒத்திருந்தான்.