பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூஷேக் கால்ஷோயன் I 53 "அந்தப் பையன் என் மகனுக இருந்திருக்க வேண்டியவன்', என்று ஸோரோ நினைத்தான். 'யார் உன் மனைவி, என் ஆட்டுக்குட்டியே?’ எனக் கேட்டான். அவ ன் மனேவி, ஸோரோவை அடுத்து உட்கார்ந்திருந்தவள், கருணை உள்ளம் கொண்ட பெண்ணுகத் தோன்றினுள். அவன் அவள் கூந்தலை வருடினன், இந்த இனிய இளம் பெண் என் மருமகள்’ என்று எண்ணினன். 'உன் ஆரோக்கியத்துக்காக!' அவன் ஒன்றன் பின் ஒன்ருக இரண்டு கிளாஸ்கள் குடித்தான். பையனை அதிகக் கூர்மையாகக் கவனித்தான். பையனின் கருமணிகள் ஆனந்தத்தால் ஒளிர்ந்தன; அவன் கண்களில் பாடல்கள் இருந்தன. நிச்சயமாகப் பாடல்கள் இருந்தன. இந்தவிதமான கண்களை உடைய இளைஞர்கள் அனைவரும் பொதுவாக நல்ல குரல் பெற்றிருந்தார்கள் என்பதை அவன் கவனித்திருந்தான். 'நீ பாடுவாயா, என் ஆட்டுக்குட்டியே?’’

பாடுவேன்' என்று பையன் சந்தோஷமாய்ச் சொன்னன். " அப்படியானல், என் குடிக்கு நீ ஒரு பாட்டுப் பாடு!” பையன் பாடியபோது அவன் மீண்டும் குடித்தான். அவன் கண்களில் பணி படர்ந்ததை உணர்ந்தான். இவ்வளவு சீக்கிரமா?. ஒரு சிறு கோப்பையால் ஒரு சில தடவைகள் தானே அவன் குடித்திருந்தான்... இனிமேல் குடிக்கக்கூடாது... ஸோரோ விருந்து சாப்பிட வரவில்லை. அவன் மகன்கள் குடிக்கட்டும். ஆனால் அவனுக்கு ஒரு நோக்கம் உண்டு... அலெஹ் எங்கே இருக்கிருள்? முதியவள் உள்ளும் புறமுமாக, அழகாய் சீராக நடந்து கொண்டிருந்தாள். அவள் உதடுகளில் புன்முறுவல் நிலைத் திருந்தது. 'நீ நீண்டகாலம் வாழ்வாயாக, என் சிறுவனே.” வோரோ கோப்பையை உதட்டருகே கொண்டு போஞன், தயங்கிளுன்குடிக்கவா, வேண்டாமா? ஆலுைம் குடித்தான். 'உனக்கு இதைவிடப் பெரும்பேறு சித்திக்கட்டும். ஆனல் அது உன் பாடல் இல்லை. நீ பாட வேண்டிய பாட்டு வேறு ரகமானது. இப்போ கவனி. நான் என் பா ட் ைடப் பாடுகிறேன்.’’ பாடத் துவங்குவதற்கு முன் ஸோரோ கண்களை மூடி, தலை குனிந்து, இடுப்பையும் தோள்களையும் அங்கும் இங்குமாக