பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூஷேக் கால்ஷோயன் 互55 விரும்புகிறேன்’ என்ற லோரோ பாட்டு மாதிரி நீட்டினன்: 'நண்பகல் வேண்டாம், அஸ்தமனம் வேண்டாம், மாலை நேரம் வேண்டாம், இரவும் வேண்டாம், கோடை வேண்டாம், மாரிக் காலம் வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். வசந்தம் மட்டுமே இருக்கவேண்டும். வசந்தகாலமும் காலை வேளேயும் மட்டுமே... முதியவராக வளர்வது இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன், அலெஹ், குழந்தை குழந்தையாகவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் அந்த அழகிய கல் மேலும், பனி படிந்த பச்சைப் பயிர்களுக்கு மத்தியில நீ உன் தலையில் ஒரு பூமாலேயோடும் இருக்கவேண்டும், அலெஹ்...” 'அம்மா, அவர் உன்னை நோக்கித்தான் பேசுகிருர்!’’ எல்லோரும் கிழவனின் தனிமொழியை அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வீட்டுக்காரனின் இளைய மகன் நெகிழ்ந்து போனன். 'லோரோ மாமா உன்னிடம்தான் சொல்கிருர் அம்மா!. அவர் பக்கத்தில் வந்து உட்காரு.” ஆனல் அம்மாவுக்கு எழுவதற்கே சிரமமாக இருந்தது. மகன் உதவினன். அவன் அம்மாவை இட்டுவந்து லோரோ அருகில் அமர்த்தினான். 'ஒ, மாராதுக்!’ ஸோரோ எழுந்து, முதியவளை எடுத்துத் தன் மடிமீது வைத்தான். உடனே அவள் தன் முகத்தைத் கிழவனின் மார்பில் புதைத்தாள். ஸோரோ தனது தலையைத் தாழ்த்தினன். அவன் கன்னம் அலெஹின் தலைமுடியைத் தொட்டது. அவன் லேசாக அசைந்து, அரைவாசி மூடிய கண்களால் சன்னலுக்கு வெளியே நோக்கி, இசைபோல் இழுத்துக் கூப்பிட்டான்: 'அலே-ஏஹ்...! அலெஹ், என் கண்ணே, அலே-ஏ-ஏஹ்...!’’