பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹ்ரான்ட் மா.வோசியன் (1935) ஆகஸ்ட் ஆண்ட்ரோ ஒரு வண்டி செய்துகொண்டிருந்தான். பைன் மரப் பலகையைத் திட்டம் பண்ணி முடித்த உடனேயே குறுக்குக் கம்பு தயாராகிவிடும். ஒட்டை போடுவதற்கு வெகுநேரம் பிடிக்காது. ஆகவே, வேலை ஏறக்குறைய முடிந்துவிட்டது. என்ன விசித்திரமான ஜனங்கள் அவர்கள். ஒவ்வொரு பொருளையும் சொர்க்கத்திலிருந்து கிடைத்த வரப்பிரசாதம் போல் கருதுகிருர்கள். பார்க்கப்போல்ை, அவர்கள் செய்வதும் சரிதான். கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் வேலை செய்வது என்பது விளையாட்டில்லை. சாயங்காலம், ஸானசா ரிடம் காளைமாடு இரவல் பெறுவதற்காக அவன் கிராமத்துக்குப் போவான். கோடைக்கால மேய்ச்சல் தளத்தில் விறகுகள் மீந்திருக்கவில்லை எனத் தோன்றியது. அவன் போய், பசுக்களை நோட்டம் விடுவான். அங்கே ஆஷ்கென் நிச்சயம் நல்ல தயிர் வைத்திருப்பாள். கொஞ்சம் தயிர் சாப்பிடலாம். எல்லாம் ரொம்ப நல்லதே. ஆனல் ஆண்ட்ரோவுக்கு வண்டிச் சட்டம் பிடிக்கவில்லை. முன்பகுதி மோசமில்லை. அது உருண்டு, மழமழவென்றிருந்தது. நேர்த்தியாக இருந்தது என்றுகூடச் சொல்லலாம். ஆனல் வண்டி என்னவோ சரியாக அமையவில்லை. ஒரு பக்கம் சற்றே சாய்ந்திருந்தது. அவன் அதை ஒரு சங்கிலியால் இழுத்துச் சரிபண்ணி, அப்படியே இரண்டு நாட்கள் இறுக்கிப் பிணைத்து வைக்கவேண்டும். அதைச் சீர்படுத்த வேறு வழியில்லை. அடிக்கடி ஆஷ்கென், அவனுக்கு வேருெரு பெண்போல், அவன் அறிந்தேயிராத ஒரு பெண்ணுகத் தோன்றுவாள். ஒரு இளம்பெண் மாதிரி, வேறு யாருடைய மனைவியோ போல. அவ்வப்போது ஆஷ்கென் வெகு இனிமையானவள் ஆவாள். அத்தகைய நேரங்களில் அவள் தனது கூர்மையான நாக்கை எங்கே ஒளித்து வைத்திருக்கிருள் என்று யார் சொல்லக்கூடும்? ஏனெனில், அப்போது அவள் கண்களில் கதகதப்பான கங்குகள் கனல அவனைப் பார்ப்பாள். ஆகவே நாம் அவர்களை அப்படித் தான் நடத்தவேண்டும்போலிருக்கிறது.