பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix அறநெறிப் பண்பு ஆகியவற்றைச் சித்திரிப்பதன் வாயிலாகத் தற்காலத்தின் மனப்பண்பையும், பிரச்சினைகளையும், கவலைகள் குழப்பங்களையும் பிரதிபலித்தது. இந்நோக்கில், விசேஷமாக எச். டுமேனியன், ஜி. ஷோரப், எஸ். ேஸ் எ ரி ய ன், டி. தெமிர்ச்யன் ஆகியோரது படைப்புத் தேடல்கள் குறிப்பிடத் தகுந்த அளவைகளை உண்டாக்கின. எச். டுமேனியனின் 'ஜிக்கோர்’, 'என் நண்பன் நெலோ', 'பந்தயம், 'நெஸோவின் கல்குளிப்பு’’ என்ற கதைகளிலும், எஸ். ஸோரி யனின் சோகமான ஜனங்கள்’ (1918), வேலி (1923), "போர்' (1925) ஆகிய கதைத் தொகு தி களி லும், டி. தெமிர்ச்யனின் தேவைக்கு மேற்பட்டது", "பாதிரி’’, 'வயிறு', 'புன்னகை”, மற்றும் சில கதைகளிலும் 'சின்ன மனித”னரின் வாழ்வையும் நிலைபேறுகளையும் பிரதிபலிக்கும் விசேஷமான சித்திரிப்புகள் காணப்படுகின்றன. எச். டுமேனியன் மிகச் சமீப கால ஆர்மேனிய இலக்கியத்தின் பென்னம் பெரிய எழுத்தாளர் ஆவார். இந்திய இலக்கியத்தில் ரவீந்திரநாத தாகூர் பெற்றிருக்கும் ஸ்தானத்தை அங்கு இவர் அடைந்திருக்கிருர். இவர் தமது கவிதைகளிலும் உரைநடைப் படைப்புகளிலும் ஆர்மேனிய மக்கள் வாழ்க்கையின் யதார்த்த சித்திரத்தை ஒரு உயர்ந்த தளத்தில் உருவாக்கியிருக்கிரு.ர். மக்களின் வாழ்வும் நடைமுறைகளும், அவர்களது உண்மையான உறவுகள், மற்றும் உளஇயல்-ஆகியவை டுமேனியனது படைப்பு களின் ஆதாரமும் சாராம்சமும் ஆயின. மக்கள் மத்தியில் காணப்படும் தனிநபர்களின் காதல்களும் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் நம்பிக்கைகளும், துயரங்களும் தொல்லைகளும் இந்த எழுத்தாளரின் உள்ளத்தில் ஆழமாகப் படிந்து அவரது படைப்பு களில் வெளிப்பட்டன. அவருடைய எழுத்துகள் அவரது காலத்தின் ஜீவனை உள்ளடக்கிய உயர்ந்த படைப்புகளாகத் திகழ்கின்றன. 'அனுஷ்' என்ற கவிதை அவரது மிகச் சிறந்த படைப்பு ஆகும். அவருடைய சிறப்பான கதைகளில் ஒன்று இத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. எஸ். லோரியனின் இலக்கியச் சூழ்நிலை அமைப்பு, குணசித்திரத் தேர்வு ஆகியவற்றின் கொள்கை அவருடைய முதலாவது புத்தகத்தின் பெயரிலேயே நன்கு வெளிப்பட்டது. அவரது குணச்சித்திரங்கள், உண்மையில் துயரம் நிறைந்த மக்களேயாவர்; அவர்களுடைய அன்ருடக் கவலைகளும் பிரச்சினை களும் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல. அவர்கள் வாழ்க்கையின் அர்த்தத்தையே இழந்துவிட்டவர்கள்போல் தோன்றுகிருர்கள்: