பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置岔盛 ஆகஸ்ட் 'அன்ட்ரானிக்' கிழவி கூப்பிட்டாள். "அன்ட்ரானிக்! அன்ட்ரானிக்!” ஊம்ங்? என்ன விஷயம்?’’ * நீ ஏன் நிற்கிருய், அன்பே?’’ மீண்டும் மரங்களுக்கு அப்பால் சிரிப்பு எழுந்தது. அது திரும்பவும் கிழவிக்கு அதிருப்தி தந்தது. 'அது யார் அப்படிச் சிரிப்பது, அன்ட்ரானிக்?’’ 'எனக்கு எப்படித் தெரியும்?’’ என்ன சொல்கிருய், அன்பே?’’ 'எனக்குத் தெரியாது என்று சொன்னேன்.” * அன்ட்ரானிக்!’’ என்ன?’’ 'குதிரையை வேறு இடத்தில் கொண்டு கட்டியைா?’’ "ஆமாம்.’’ தேனீத் தோட்டத்திலிருந்த தேன் கூடுகளில் தேனிக்களின் கனத்த இசைச்சல் நீடித்தது. லாக்கின் கோடைக்காலக் குடிக் கூலிக்காரர்கள் கணவாய் பாதை வழியே ஆற்றுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சோர்வாகச் சிரித்தார். அது ஒரு பெண். அவள் சோர்வாகச் சிரித்தாள். அவர்கள் நான்குபேர். இரண்டு சிறு பெண்கள் உண்மையில் குழந்தைகள் தான். பெரிதாக இருந்த ஒரு இளம் பெண். பெருந்தேகிதான் உண்மையில். அவள் ஒட்டகம்போல் நடந்தாள். அவள் நிஜமாகவே சரியான ஆள்தான். நான்காவது, சிறு பெண்களின் தாய். முன்னுெரு காலத்தில் பெர்சியாவிலோ, வேறு எங்கோ, ஒரு ராணி இருந்ததாகச் சொன்னர்கள். அவள் தன் போர் வீரர்களை அணிவகுத்து நிற்கும்படி செய்வாளாம். அவள் அந்த வரிசைகளைப் பார்த்தவாறு நடப்பாள். அவள் மனசுக்குப் பிடித்த ஒருவனைத் தேர்ந்தெடுப்பாள். அவனே அன்றைய இரவுக்குக் காதலகை ஆக்கிக்கொள்வாள். மறுநாள் காலை அவன் தலையை வெட்டிவிடச் செய்வாளாம். எவ்வளவு இரக்க மில்லாத ராணியாக அவள் இருந்திருக்கிருள். அவளோடு இரவைக் கழித்துவிட்டு, சரியான நேரத்தில் தப்பி ஓடுவதற்குத் தேவையான சாமர்த்தியம் பெற்றவன் அவர்களில் ஒருவன் கூடவா இல்லாது போனன்? சன்னல் வழியாகக் குதித்திருக்க லாமே? அங்கு சன்னல்கள் இருந்திருக்கத்தான் வேண்டும். 'அன்ட்ரானிக்!’’