பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹ்ரான்ட் மாடவோசியன் 星65 வேண்டும்போலிருந்தது. உடனே, தன் தந்தை தலையை நிமிர்த்தி இந்தத் தடிப் பெண்பிள்ளை மிகச் சிறிய சிவப்பு ஜட்டி அணிந்து பாறைமீது படுத்திருப்பதைப் பார்ப்பதாக அவன் சட்டென்று கற்பனை செய் தான். உண்மையில் ஆண்ட்ரோ சிரிக்கத்தான் விரும்பினன்; மாருக, அவன் வருத்தமே கொண்டான். ஏனென்ருல், காலணிகளுக்காகத் தோலைப் பதப்படுத்தும் தந்தையை அவன் நினைவுகூர்ந்தான். அவர் தாடி பணிபோல் வெளுத்திருந்தது. தந்தையின் அமைதி யான சமாதியை அவன் நினைத்தான். கல்லறையில் நின்ற புல் அமைதியாக அசையாது நின்றது, இந்தப் பெண் அவனுடைய அப்பாவின் பாறைமேல் கிடந்து, வெயில் காய்ந்து சூரியனை சுகமாக அனுபவித்துக்கொண்டிருந்தாள். தண்ணிரில் அவன் அம்மாவின் கால்கள் மிக வெண்மையாய், மெலிவாய் தெரிந்தன. அவள் ஆட்டுரோமத்தைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தாள். அவன் நீருடன் சேர்ந்து பாடினன். மேலும், அப்பாவி ஆல்கோவுக்கு வேர்த்துக் கொட்டியது. வெயிலில் கறுத்த இந்தப் பெண்கள் ஆற்றின் நடுவே பாறைகளுக்கு ஊடாக வெளித்தோன்றிய வலிமையான இரு புது முளைகள்போல் இருந்தார்கள். ...அவன் தந்தை அவனுக்காக ஒரு கோடாரிக் கைப்பிடி செய்தார். அவன் கறுப்பான பழஞ்சாணிக் குவியல் மீது நின்று ஒரு பூசனிக்காயை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்பா தேன்கூடுகளுக்கு மத்தியில், அவற்றின் உள்ளேயிருந்து வந்த இரைச்சல்களைக் கவனித்தபடி உட்கார்ந்திருந்தார். என் கோடாரிக்கு கைப்பிடி இல்லை, அப்பா’’ என்று அவன் சொன்னன். - 'நீ சொல்வது கேட்கவில்லை மகனே. அப்பா வாயைத் திறந்து சிரித்தவாறு அவனே உற்று நோக்கினர். அவருடைய தாடி பணிபோல் வெளுத்திருந்தது. அவன் மெதுவாக நடந்து, ஒரு தேன்கூட்டின்மேல் சாய்ந்து நின்று, தந்தையைப் பார்த்துச் சிரித்தான். '"நான் என்ன செய்வேன்? என் கோடாரிக்குக் கைப்பிடி இல்லை என்றேன்’ எனக் கூறினன். "நான் செய்து தருவேன், மகனே.” அவர் நிதானமாகச் செதுக்கி ஒழுங்குபடுத்தினர். வேல்ை செய்கையில் மென்மையாகப் பேசிக்கொண்டேயிருந்தார். பிறகு ஒரு துண்டுக் கண்ணுடி வைத்து அதை உரசித் தேய்த்தார்.