பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹரான்ட் மாடவோசியன் # 57 போது அதை மறைத்தது. அவள் ஊற்றின்மேல் குனிந்தபோது, அவள் பெருகிப் பரவியதாகத் தோன்றினுள். பிறகு நிமிர்ந்து நேரானதும், அவள் சீராகிவிட்டாள். கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அவள் அங்கேயே சிறிது நேரம் நின்ருள். "அன்ட்ரானிக்?’’ ஆண்ட்ரோ, திறந்த தேன்கூடு ஒன்றின் அருகே நின்ருன். கூட்டின் கூரையையும் மேல்தட்டையும் பிரித்த வலைச் சதுரத்தை அகற்றிக்கொண்டிருந்தான். ஆனல் அந்த வலை வர மறுத்தது. அவனது செயல்களால் கூடு ஆடியது. இது தேனீக்களை திடுக்கிட்டுக் கும்பலாக வெளியே வரும்படி பண்ணியது. ஒரு ஈ அவன் முதுகின்மேல் ஊர்ந்தது. சட்டைக் கையில் ஒட்டிக் கொண்டது. ஆண்ட்ரோ சிறிது புகையை அதன் மேலே ஊதிஞன். அது மேலாகப் பறந்து அவன் நெற்றியில் மோதியது.

  • அன்ட்ரானிக்: ' 'கிழவிக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது!’’ ஒரு கழுதை ஒரு சுமை வைக்கோலைத் துரக்கிக்கொண்டு, அடர்த்தியில்லாத காட்டிலிருந்து வெளிப்பட்டது. அது: மெதுவாக வந்துகொண்டிருந்தது.

தேன்கூட்டின் சட்டங்கள் கனத்திருந்தன. நிறைந்துவிட்ட அடைகளில் இருந்த தேன் வெயிலில் மின்னியது. இன்னும் இரண்டு நாட்களில் சேகரிப்பதற்கு ஏற்ருற்போல் அது பக்குவ மாய்த் தயாராகிவிடும். கீழ்த்தட்டுச் சட்டங்களில் ஒன்றிரண்டை இப்போதுகூட எடுத்துவிட்டு வேறு காலிச் சட்டங்களை வைக்க லாம். காலநிலை மோசமாக மாறினால், அவன் அவற்றைத் திரும்பவைத்துவிடலாம். திடீரென்று அவன் கழுத்தில் ஒரு ரத்தநாளத்தின் வழியே கூரிய வேதனை ஒன்று பாய்ந்தது. அவன் தலைமுடியில் சிக்கிக்கொண்ட ஒரு தேனி அவன் காதருகில் உரக்க இரைந்தபடி பறந்தோடியது. 'அன்ட்ரானிக்1’’ என்ன விஷயம்? உனக்கு என்ன வேண்டும்?' அவன் கோபமாய்க் கத்தினன். அவன் கழுத்து வலித்தது. கழுதைமீது ஒரு பக்கமாய்ச் சரிந்திருந்த வைக்கோல் சுமை ஆண்ட்ரோவின் வீட்டை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அதை ஒட்டுபவன் இன்னும் தென்பட வில்லை. அது ஒரு கிழவகை இருக்கலாம்: அல்லது ஒரு குழந்தை யாக இருக்கும். ஸ்டீபன் வயிற்று வலியோடு சுகமாக உட்கார்ந்