பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆகஸ்ட் திருந்தான். கடந்த பத்து வருஷங்களாகவே அவனுக்கும் அவன் வலிகள் நோவுகளுக்கும் குறைவில்லை. ஆலுைம், அவனுடைய பசுவுக்கு எப்போதும் வயிறு நிறையத் தீனி கிடைத்துவந்தது.' அவன் மற்ற எவரைக் காட்டிலும் அதிகமான வைக்கோல் சேகரித்து வைத்திருந்தான். ஆண்ட்ரோ சட்டத்தை மாற்றினன். அரைவாசி நிறைந்திருந்த அடுத்த சட்டத்தை எடுத்தான். அதைக் கூட்டின் ஒரு புறத்தில் சாய்த்து வைத்தான். பிறகு நடுவில் அதற்கு ஒரு இடம் கண்டுபிடித்தான். சட்டப்பகுதியை வலை அடித்த சதுரத்தால் மூடியபோது ஒரு தேனி அவன் உள்ளங் கையில் கொட்டியது. ஆண்ட்ரோ புன்னகைத்தான். இந்தக் கூட்டில் குறைந்தபட்சம் பத்து அல்லது பதினேந்து கிலோ தேன் இருக்கும். அது நல்ல வருஷம். அவன் கூட்டை மூடினன், உள்ளங்கையிலிருந்து கொடுக்கைப் பிடுங்கிவிட முயன்ருன். ஆளுல் அவன் விரல்கள் பருமனக இருந்ததால் அதை அவளுல் பற்ற இயலவில்லை. உண்மையாகவே ஸ்டீபன் சீக்காக இருந்தான். ஒருவன் அதை நிரூபிப்பத்ற்காகச் செத்துப்போக வேண்டுமா என்ன? ஒரு பசு எவ்வளவு வைக்கோல் தின்னக்கூடும்? ஒருவன் ஒரு இரவு நன்ருகத் துரங்கினல், மறுநாள் அவன் ஒரு பசுவுக்குப் போதுமான அளவு வைக்கோல் சேகரித்துவிட முடியுமே, வைக்கோல் சுமை இப்போது மரவேலியைக் கடந்து வந்தது. பிறகு, பசுத் தொழுவம் வழியாகச் சென்றது. பீயர் மரத்தை அடைந்ததும் அது ஆண்ட்ரோவின் வீட்டை நோக்கித் திரும்பியது. அப்போதுதான் அது கழுதை இல்லை என்று அவன் கண்டான்.

  • அன்ட்ரானிக்!’’
  • என்ன?’ ’

வைக்கோலை யார் கொண்டு வந்தது?’’ "என்ன விஷயம், ஒரே சமயத்தில் அவள் இவ்வளவு சுமையைத் தூக்கி வரவேண்டுமா என்ன? என்று அவளிடம் கேள். அவள் குறைவாக எடுத்து வரக்கூடாது?’’ நீயே எல்லாவற்றையும் சொல்லிவிட்டாய்.” மரியம் வந்தாள். சுமையை மரத்தின்மீது சாய்த்து அசைந்தாடினள். ஒரு கட்டைமீது சாயவே அவள் விரும்பினள். ஆனால், தவறிவிட்டாள். ஆகவே, சுமையோடு தரைமேல் சரிந்தாள். லேசான முறுவல் அவள் உதடுகளில் ஊர்ந்தது.